சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்குத் தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்குத் தொற்று

1 mins read
57c77519-8387-4d12-8b7f-a9b2da0b318c
-

சிங்­கப்­பூ­ரில் மேலும் 13 பேருக்கு கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இவர்­க­ளு­டன் சேர்த்து கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 60,221க்கு அதி­க­ரித்­துள்­ளது.

புதி­தாக பாதிக்­கப்­பட்ட 13 பேரும் வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­கள். சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­தும் அவர்­கள் அனை­வ­ரும் வீட்­டில் தங்க உத்­த­ர­வி­டப்­பட்­டது என்று சுகா­தார அைமச்சு தெரி­வித்­தது. சமூக அள­வில் யாருக்­கும் தொற்று ஏற்­ப­ட­வில்லை.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்குவிடு­தி­க­ளி­லும் எவ­ரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை.

கடை­சி­யாக, கடந்த மார்ச் 12ஆம் தேதி அன்று உள்­ளூ­ரில் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.