'ஊழியர் நலனில் நிதி நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும்'

'ஊழியர் நலனில் நிதி நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும்'

1 mins read
dc32d6f5-3458-4265-acac-7d56ee90b5d2
-

ஊழி­யர் நல­னில் அக்­கறை செலுத்­து­வது, நீக்­குப்­போக்­கான வேலை நேரம், செயல்­பா­டு­களை செம்­மை­யாக்க தொழில்­நுட்­பங் ­க­ளைப் புகுத்­து­வது போன்ற நல்ல நடை­மு­றை­களை வங்­கி­களும் நிதி நிறு­வ­னங்­களும் பின்­பற்­று­வது அடுத்த கொள்­ளை­நோய்க்கு தயார்ப்­ப­டுத்­தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கையை கொவிட்-19 தலை கீழாகப் புரட்டிப்போட்டு உள்ள நிலையில் நிதி நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்களை ஆராய 'எதிர்கால வேலையிடங்கள்' எனும் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்கு சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் ஆதரவு அளித்திருந்தன.

கொள்ளைநோய் மீண்டும் ஏற்பட்டால் தயாராக இருப்பது எப்படி என்பதற்கு வழிகாட்டும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாக வங்கிகள் சங்கம் தெரி வித்தது.