மின்சார வாகனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

மின்சார வாகனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

1 mins read
4db06dcc-b158-4405-a2f4-6f353869d26a
-

மின்­சார கார்­க­ளுக்கு குறைந்த வட்­டி­யில் கடன் வழங்­கப் போவ­தாக பிர­பல ஹோங் லியோங் நிதி நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

மின்­சார கார்­களை வாங்­கு ­ப­வர்­களை ஈர்க்க கடந்த மாதம் டிபி­எஸ் வங்­கி­யும் இதே போன்ற அறி­விப்பை வெளி­யிட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில் வாடகை கார்­க­ளுக்­கான கடன் வட்டி விகி­தம் 1.5 விழுக்­கா­டாக இருக்­கும் என்று ஹோங் லியோங் தெரி­வித்­தது. இது, சிங்­கப்­பூ­ரி­லேயே ஆகக் குறை­வான வட்டி விகி­தம் என கூறப்படுகிறது.

முழு­மை­யான மின்­சார கார்­ க­ளுக்­கும் 'ஹைபி­ரிட்' எனக் குறிப்­பி­டப்­படும் பெட்­ரோல் மற்­றும் மின்­சா­ரத்­தில் இயங்­கும் கார் ­களுக்­கும் 1.5 விழுக்­காடு வட்டி விகி­தத்­தில் கடன் வழங்­கப்­படும் என்று ஹோங் லியோங் குறிப்­பிட்­டது. சொந்தமாக மின்னூட்ட நிலையங்களை அமைக்க விரும்பும் வாடகை நிறுவனங் களுக்கும் கடன் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. "வாகன வாடகை நிறு வனங்களை இலக்காகக் கொண்டுள்ளோம்," என்று ஹோங் லியோங் ஃபைனான்ஸ் தலைவர் ஆங் டாங் சோர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் தனியார் வாடகை கார் நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 142 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளன. 2020 நிலவரப்படி 71,147 கார்களை தனி யார் வாடகை நிறுவனங்கள் வைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.