குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) தன்னிடம் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு ஏஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வகை செயலியை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் போலி கடவுச்சீட்டுக்கும் உண்மையான கடவுச்சீட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை எளிதில் கண்டறிய முடியும்.
மின்னிலக்கக் காட்சிக்கூறுகள் மூலம் ஒரு பொருளின் நிகழ்நேர வடிவத்தைப் பெரிதாக்கிக் காட்டக்கூடியது இந்த ஏஆர் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த செயலி ஆணையத்தின் பயிலகத்திலுள்ள கைக்கணினிகளில் நிறுவப். பட்டுள்ளது. வேறுபாட்டை உணர்ந்தறியும் வகையில், இச்செயலியின் ஆவணத் தொகுதியில் உலகின் 16 நாடுகளைச் சேர்ந்த 24 உண்மையான கடவுச்சீட்டுகளும் போலி கடவுச்சீட்டுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 50 அதிகாரிகள் கடந்த டிசம்பர் முதல் இந்த முன்னோடி சோதனை முறையில் பயிற்சிபெற்று வருகிறார்கள். மின் னிலக்க வடிவிலான கடவுச் சீட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைக் கற்று வரும் அவர்கள், ஆவணச் சோதனை (அடிப்படை) பாடப்பிரிவின் ஒரு பகுதியாக இந்தப் புதிய சோதனை முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்திலுள்ள ஆணையத்தின் பயிற்சித் தளபத்தியம் உருவாக்கியுள்ள செயலி, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் தாள் அடிப்படையிலான சரிபார்ப்பு முறைக்கு மாற்றாக அமையும்.
மேலும் அதிகமான அதிகாரிகள் பயிற்சி பெறும் வகையில் பயிற்சியில் உள்ள அனைவருக்கும் அடுத்த மாதவாக்கில் இந்தப் புதிய சோதனை முறை விரிவுபடுத்தப்படும் என ஆணை யம் கூறியுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 350 அதிகாரிகள் புதிய செயலி அடிப்படையிலான சோதனையைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்னிலக்க கடவுச்சீட்டுகளில் மிக நுண்ணிய விவரங்கள் உள்ளடக்கப்படு கின்றன.
இவற்றுக்கும் போலி கடவுச் சீட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை, பயிற்சி பெறும் அதிகாரிகள் கைக்கணினியை அசைத்து, நகர்த்தி கண்டுபிடித்துவிடலாம்.
நுண்ணெழுத்துகள், அச்சு வேறுபாடு, 'வாட்டர்மார்க்' எனப்படும் மறை வடிவம் போன்றவை இதனுள் அடங்கும். புறஊதாக் கதிர் ஒளி, உருப்பெருக்கி போன்றவையும் ஏஆர் தொழில்நுட்ப அனுபவத்தைத் தரக் கூடிய பிற அம்சங்கள்.
பயிற்சி நடைமுறைகளை மேம்
படுத்த இந்தச் செயலி உதவும் என ஆணையத்தின் மூத்த ஆவணப் பகுப்பாய்வாளர் கேன்டைஸ் சின் கூறினார்.

