$472,000 லஞ்சம்: பல்கலைக்கழக முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

$472,000 லஞ்சம்: பல்கலைக்கழக முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

2 mins read
9400688c-67fa-490b-ba5e-0c50cdd221af
-

லஞ்­ச­மாக $472,000 வரை பெற்­ற­தாக சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­

க­லைக்­க­ழ­கத்­தின் (எஸ்­எம்யு) முன்­னாள் துணை இயக்­கு­நர் ஒரு­வர் மீது குற்­றச்­சாட்­டுப் பதிவு செய்­யப்­பட்­டள்­ளது.

கிறிஸ்­ட­ஃபர் டான் டோ இங்கீ, 43, (படம்) என்னும் அவர் பல்­

க­லைக்­க­ழ­கத்­தில் மூவ­ருக்­குச் சாத­க­மான வர்த்­தக அனு­கூ­லங் க­ளைச் செய்து தர 2017 ஆகஸ்ட்­டுக்­கும் 2019 நவம்­ப­ருக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் அவர்­க­ளி­ட­மி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மா­கப் பணம் பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

லஞ்ச ஊழல் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் 50 குற்­றச்­சாட்­டு­களை இவர் எதிர்­நோக்­கு­கி­றார். இவ­ருக்கு லஞ்­சப் பணம் கொடுத்­த­தாக மூவர் மீது நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

இண்­டர்­நே­ஷ­னல் அலை­யன்ஸ் மார்க்­கெட்­டிங் என்­னும் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் கென்­னத் லம் சியன் லூங், சிஜே சினர்ஜி நிறு­

வ­னத்­தின் இயக்­கு­நர் செர் கெங் தான், அசெட்­டு­வ­லைஸ் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­குர் ஜெஃப்ரி லாங் சீ கின் ஆகி­யோர் அம்­மூ­வர். லஞ்­சம் பெற முன்­வந்த 35 குற்­றச்­சாட்­டு­களை லம் எதிர்­நோக்­கு­கி­றார்.

இதே­போன்ற எட்டு குற்­றச்­சாட்­டு­களை லாங்­கும் ஏழு குற்­றச்­சாட்­டு­களை செர்­ரும் எதிர்­நோக்­கு­கின்­ற­னர். இவை தவிர, லஞ்ச ஊழல் புலன் விசா­ர­ணைப் பிரிவு அதி­கா­ரி­க­ளி­டம் பொய்த் தக­வலை தந்த ஒரு குற்­றச்­சாட்டை டானும் செர்­ரும் எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

விசா­ரணை நடை­பெற்­ற­போது, தம்­மி­டம் கட­னாக வாங்­கிய பணத்தை செர் தம்­மி­டம் கொடுத்­த­தாக டான் கூறி­னார். அது உண்­மைக்கு மாறான தக­வல் என்று பின்­னர் தெரிய வந்­தது.

மேலும், பணம் வாங்­கி­யது மற்­றும் வாங்க இருப்­பது ஆகி­யன தொடர்­பில் மூவ­ரும் அனுப்­பிய தக­வலை தம் கைபே­சி­யி­லி­ருந்து டான் அழித்­ததை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

நால்­வ­ரும் வழக்கு விசா­ர­ணைக்­காக ஏப்­ரல் 20ஆம் தேதி மீண்­டும் நீதி­மன்­றம் வர­வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. ஒவ்­வொரு லஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டுக்­கும் ஐந்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை, $100,000 வரை­யி­லான அப­ரா­தம் ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம். லஞ்­சக் குற்­றம் தொடர்­பில் பொய்த் தக­வல் தரு­வோ­ருக்கு ஓராண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் $10,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.