பெற்ற தாயை துன்புறுத்திய இளையருக்கு 56 வார சிறை

பெற்ற தாயை துன்புறுத்திய இளையருக்கு 56 வார சிறை

1 mins read
f7b31dd3-819a-40df-bd23-07cdcf55865e
-

தாயை துன்புறுத்தியதற்காக தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பட்டக்கல்வி மாண வரான ஏன்டி கோ ஜு ஹுவா, 30, என்பவருக்கு 56 வார சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. தம்முடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த தமது தாயை 2017ஆம் ஆண்டு முதல் தாக்கியும் பட்டினி போட்டும் கொடுமை செய்த தாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த 68 வயது மாதை குளிக்கவும் வீட்டில் உரக்கப் பேசவும் அந்த இளையர் அனு மதிக்கவில்லை. கிழிந்த ஆடை அணிந்தவாறு அந்த மூதாட்டி வீட்டுக்குள் இருக்க வேண்டும்; அப்போதுதான் அவரால் வெளியே சென்று உதவி நாடமுடியாது என்பது மகனின் திட்டம். உலோகத் தாழ்ப்பாளால் மூதாட்டியின் முகத்தில் தாக்கி, அவரது மறைமுகப் பகுதியில் உதைத் தது போன்ற குற்றச்செயலி லும் அந்த இளையர் ஈடுபட்டார்.