மூன்றாண்டு காலத்தில் $800,000 ரொக்கப் பணத்தை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்திற்காக 52 வயது சிங்கப்பூர் பெண்ணுக்கு $18,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ரெஜினா பேகம் ஷேக் நூர்தீன் எனப்படும் அவர் $20,000க்கும் மேற்பட்ட ரொக்கத்தை சிங்கப்பூருக்குள் எடுத்து வரும்போதும் அரசாங்க அதிகாரிகளிடம் அது குறித்து அறிவிக்கத் தவறினார். அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம்.
அவர் இதுபோல 27 முறை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. குறைந்தபட்சம் $30,000 ரொக்கப் பணத்தை முறையான அறிவிப்பு செய்யாமல் சிங்கப்பூருக்குள் எடுத்து வந்த மூன்று குற்றச்சாட்டு களை அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்படும்போது இதுபோன்ற இதர 24 குற்றச்சாட்டு களை நீதிபதி ஜஸ்விந்தர் கோர் கவனத்தில் எடுத்துக்கொண்டார்.
2015 டிசம்பர் 16ஆம் ேததிக்கும் 2018 டிசம்பர் 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ரெஜினா சாங்கி விமான நிலையத்தின் வருகையாளர் மாடத்திற்குள் நுழைந்த போது பல சந்தர்ப்பங்களில் அவர் இந்தக் குற்றத்தை புரிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அவரது குற்றங்கள் கடந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தன.
பெண் ஒருவர் முறையான அறிவிப்பின்றி சிங்கப்பூருக்குள் பெரிய தொகையை எடுத்து வருவது அல்லது எடுத்துச் செல்வதில் ஈடுபட்ட தாக அன்றைய தினம் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் நேற்று அறிக்கை ஒன்றில் கூறியது.
அதனைத் தொடர்ந்து வர்த்தக விவகாரத் துறை விசாரணையில் இறங்கியது.
பின்னர் ரெஜினா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூருக்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது $20,000க்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தை வைத்திருப்போர் சுய விருப்பத்தின் பேரில் அதனை தம் வசம் வைத்திருப்பதாக அதிகாரி
களிடம் தெரிவிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது.
இதனை மீறுவோர் மீது லஞ்ச ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர வகை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்படுவர்.
அந்தக் குற்றங்களுக்காக அவர் களுக்கு மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனை, $50,000 வரை யிலான அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனைகளாக விதிக் கப்படலாம்.

