நிக்கல் எனப்படும் ஒரு வகை வெள்ளை உலோக வர்த்த கத்தில் முதலீடு செய்தால் மூன்றே மாதங்களில் 15%
லாபம் பார்க்கலாம் எனக் கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி யதாக வர்த்தகர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இங் யு ஸி, 33, எனப்படும்
அவர் இரு நிறுவனங்களின் இயக்குநர். ஆனால் அவ்விரு நிறுவனங்களும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் உரிமத்தைப் பெற்றிருக்க வில்லை. இங் மோசடி செய்த தொகை $1 பில்லியன் வரை இருக்கலாம் என கூறப்பட்டது. சிங்கப்பூரிலேயே ஆகப் பெரிய மோசடியாக அது கருதப்படு கிறது. நிறுவனத்தில் செய்யப் பட்ட $1 பில்லியன் முதலீட்டில் இருந்து $300 மில்லியனை
இவர் தமது சொந்தக் கணக்கிற்கு மாற்றியது தெரிய வந்தது. இவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் பின்னொரு தேதியில் சுமத்தப்படும் என கூறப்பட்டது.