செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d123dfff-3d56-43a5-8046-91363b4f3e22
-

$369,000 மதிப்புள்ள மின் சிகரெட்டுகள், உபரிப் பொருட்கள் பறிமுதல்

சுகாதார அறிவியல் ஆணையம் இம்மாதம் 18ஆம் தேதி, $369,000 மதிப்புள்ள மின் சிகரெட்டுகளையும் அதன் தொடர்பான பொருட்களையும் பறிமுதல் செய்தது. சட்டத் துக்குப் புறம்பான மின் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட தில் இதுவே ஆகப் பெரியது. இச்சம்பவம் தொடர்பிலான புலனாய்வில் மூவர் உதவி வருவதாகவும் அவர்களில் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் இருந்ததன் தொடர்பிலும் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் சுகாதார அறிவியல் ஆணையம், சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவை நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

தகவல் கிடைத்ததன் தொடர்பில் துவாஸ் பகுதியில் பதுங்கியிருந்த ஆணையத்தின் அதிகாரிகள், கள்ளத்தன மான மின் சிகரெட்டுகளைப் பெற்றுக்கொள்ள அங்கிருந்த சேமிப்புக் கிடங்குக்கு வந்த 34 மற்றும் 39 வயதுடைய ஆட வர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். பின்னர் அதே நாளில் சிராங்கூன் நார்த்தில் உள்ள ஒரு வீட்டில், மின் சிகரெட்டுகளை விற்பதில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆடவரும் கைது செய்யப் பட்டார்.

மொத்தத்தில் அதிகாரிகள் 1,157 மின் சிகரெட்டுகளையும் அதன் தொடர்பிலான 25,345 உபரி பொருட்களையும் சேமிப்புக் கிடங்கிலிருக்கும் அந்த வீட்டிலிருந்தும் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு $360,150 என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபரில் வீட்டில் தடை செய்யப்பட்ட 'நக்கல்டஸ்டர்' எனும் மற்றவரை தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் இரு ஆயுதங் களையும் 'புஷ் டெகர்' எனும் கத்தியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்பிலான விசாரணை தொடங்கியுள்ளது.

சக மாணவர்கள் மீது சிறுநீர் கழித்த கும்பலிடம் போலிஸ் விசாரணை

மாணவர்களுக்குத் தொல்லை கொடுப்பதன் தொடர்பிலான மற்றொரு காணொளி இப்போது சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. இம்முறை அதில் சம்பந்தப்பட்ட வர்கள் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் என்று நம்பப்படுகிறது.

'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளுக்கு நேற்று கிடைத்த அந்தக் காணொளியில், கறுப்பு டி-சட்டை அணிந்துள்ள ஆடவர் கும்பல் ஒன்று, பள்ளிக் கழிவறையில் நிர்வாணமாக, ஒரு சுவருக்கு அருகில் அமர்ந்த நிலையில் உள்ள ஆடவர்கள் இருவர் மீது சிறுநீர் கழிப்பதைப் பார்க்க முடிகிறது. எண் 535 கிளமெண்டி ரோடு எனும் முகவரியில் நடந்த இச்சம்பவம் பற்றி தங்களுக்கு நேற்று முன்தினம் இரவு 9.50 மணிக்கு தகவல் கிடைத்தது என போலிசார் தெரிவித்தனர். அந்தக் காணொளி எப்போது சமூக ஊட கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. அந்தக் காணொளியைக் கிட்டத்தட்ட 100 பேர் பார்த்திருக்கின்றனர். ஆனால், நேற்று முன்தினம் இரவு அக்காணொளி சமூக ஊடகத்திலிருந்து அகற்றப்பட்டது.