மரம் மீது மோதிய மசராத்தி கார்; இலேசான காயங்களுடன் தப்பிய ஓட்டுநர்

மரம் மீது மோதிய மசராத்தி கார்; இலேசான காயங்களுடன் தப்பிய ஓட்டுநர்

1 mins read
6bb9787c-619a-44e6-883b-1c0fa5fc15cf
காரின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்ததாக நம்பப்படுகிறது. படங்கள்: SG Vigilante ஃபேஸ்புக் -

தோ பாயோ லோராங் 1ல் உள்ள ஒரு மரம் மீது மசராத்தி கார் இன்று பிற்பகல் மோதியது. அந்த காரை ஓட்டிய 30 வயது ஓட்டுநர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மருத்துவமனைக்குச் செல்ல அந்த ஆடவர் மறுத்துவிட்டதாக போலிசார் தெரிவித்தனர். காரின் கட்டுப்பாட்டை அந்த ஓட்டுநர் இழந்ததாக நம்பப்படுகிறது.

விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.