திருமண வரவேற்பில் 250 பேர் பங்கேற்கலாம்

திருமண வரவேற்பில் 250 பேர் பங்கேற்கலாம்

2 mins read
aa5d6f31-6e64-450e-8a39-0f8d505a8ee5
-

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்­வின் ஒரு பகு­தி­யாக, அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் குறிப்­பிட்ட நிகழ்ச்­சி­களில் அதி­க­மா­னோர் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­படு­வர். ஆயி­னும், அந்­நி­கழ்ச்­சி­களைத் தொடங்­கு­வதற்குமுன் கொவிட்-19 பரி­சோ­தனை இடம்­பெற வேண்­டும்.

திரு­மண உறு­தி­யேற்­புச் சடங்கு, திரு­மண வர­வேற்பு, நேரடி நிகழ்ச்­சி­கள், முன்­னோட்ட வர்த்­தக, விளை­யாட்டு நிகழ்ச்­சி­கள் போன்­றவை அவற்­றில் சில.

நிகழ்ச்­சிக்­குக் குறைந்­தது இரு வாரங்­க­ளுக்­கு­முன் இரண்­டாம் முறை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் நிகழ்ச்­சிக்­கு­முன் கொரோனா பரி­சோ­தனை செய்து­கொள்­வ­தில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­வர் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­தனை குறித்த மேல்­வி­வ­ரங்­கள் gov.sg இணை­யத்­த­ளம் வாயி­லாக அறி­விக்­கப்­படும்.

திரு­மண உறு­தி­யேற்­புச் சடங்­கு­களில் இப்­போது 100 பேர் வரை மட்­டுமே கலந்­து­கொள்ள முடி­யும் என்ற நிலை­யில், அவ்­வ­ரம்பு 250 பேராக உயர்த்­தப்­ப­ட­வுள்­ளது. ஆயி­னும், அதி­க­பட்­சம் 50 பேர் கொண்ட குழுக்­க­ளாக அவர்­கள் பிரிக்­கப்­பட வேண்­டும். அந்த 250 பேரில் மண­மக்­களும் அடங்­கு­வர். அதே­போல, நூறு பேருக்கு மேல் பங்­கேற்­றால் மண­மக்­களும் உறுதி­ ஏற்­புச் சடங்­கிற்­கு­முன் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

அதே­போல, திரு­மண வர­வேற்பு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­போ­ருக்­கான வரம்­பும் 250 பேராக அதி­க­ரிக்­கப்­படும். 50 பேர் கொண்ட குழுக்­க­ளாக அவர்­கள் பிரிக்­கப்­பட வேண்­டும். நூறு பேருக்­கு­மேல் பங்­கேற்­கும் பட்­சத்­தில், நிகழ்ச்­சிக்­கு­முன் மண­மக்­கள் உட்­பட அனை­வ­ரும் கொரோனா பரி­சோ­தனை செய்து­கொள்ள வேண்­டும்.

நேரடி நிகழ்ச்­சி­க­ளைப் பொறுத்­த­மட்­டில், நிகழ்ச்­சிக்கு முந்­திய கொரோனா பரி­சோ­த­னைக்கு ஏற்­பாடு செய்­தால் 750 பேர் வரை கலந்­து­கொள்­ள­லாம். பரி­சோ­த­னைக்கு ஏற்­பாடு செய்­யா­வி­டில் அதி­க­பட்­சம் 250 பேர் மட்­டுமே கலந்­து­கொள்ள முடி­யும். நேரடி நிகழ்ச்­சி­க­ளுக்­கான வழி­காட்டி நெறி­மு­றை­களை தேசிய கலை­கள் மன்­றம் பின்­னர் வெளி­யி­டும்.

நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­த­னைக்கு ஏற்­பாட்­டு­டன் கூடிய முன்­னோட்ட வர்த்­தக நிகழ்ச்­சி­களில், 50 பேர் கொண்ட குழுக்­களாக 750 பேர் வரை பங்­கேற்­க­லாம். வழி­காட்டி நெறி­மு­றை­கள், விண்­ணப்ப விவ­ரம் குறித்து சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் பின்­னர் வெளி­யி­டும்.

நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­த­னை­யு­டன் கூடிய முன்­னோட்ட விளை­யாட்டு நிகழ்ச்­சி­களில் 750 பேர் வரை அமர்ந்து பார்க்க முடி­யும். ஸ்போர்ட்­எஸ்ஜி அமைப்பு விரை­வில் மேல்­வி­வ­ரங்­களை வெளி­யி­டும்.

உடலை நல்லடக்கம் அல்­லது தக­னம் செய்­யும் நாளன்று, துக்க அனு­ச­ரிப்பு, இறு­திச் சடங்கு நிகழ்ச்­சி­களில் ஒரு நேரத்தில் 50 பேர் வரை பங்­கேற்க இய­லும். துக்­கம் அனு­சரிக்­கும் மற்ற நாள்­களில், ஒரு நேரத்­தில் 30 பேர் வரை மட்­டுமே பங்­கேற்­க­லாம்.

துக்க அனு­ச­ரிப்பு, இறு­திச் சடங்கு நிகழ்­வு­களில் பங்­கேற்­போர், நிகழ்ச்­சிக்கு முந்­திய கொரோனா பரி­சோ­தனை செய்து­கொள்­ளத் தேவை­யில்லை.