கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு எரிவாயு நிரப்பும் முதல் ஆசியத் துறைமுகமாக சிங்கப்பூர்

கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு எரிவாயு நிரப்பும் முதல் ஆசியத் துறைமுகமாக சிங்கப்பூர்

2 mins read
e4c09ca8-de30-4b06-a8bf-128f78abde51
சிங்கப்பூரின் முதல் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) நிரப்புக் கப்பலான 'ஃபியூல்எல்என்ஜி பெலினா' மூலமாக 'சிஎம்ஏ சிஜிஎம் ஸ்கேண்டோலா' கொள்கலன் கப்பலில் எல்என்ஜி நிரப்பப்படுகிறது. படம்: சிஎம்ஏ சிஜிஎம் குழுமம் மற்றும் ஃபியூல் எல்என்ஜி -

கொள்­க­லன் கப்­ப­லுக்கு இன்­னொரு கப்­பல் மூலம் திரவ இயற்கை எரி­வாயு (எல்­என்ஜி) நிரப்­பும் ஆசி­யா­வின் முதல் துறை­மு­க­மாக சிங்­கப்­பூர் உரு­வெ­டுத்­து இருக்கிறது.

சிங்­கப்­பூர் கடற்­து­றை­யில் தூய எரி­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்த ஊக்­கு­விக்­கப்­பட்டு வரும் வேளை­யில், இது குறிப்­பி­டத்­தக்க மைல்­கல்­லா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

பாசிர் பாஞ்­சாங் முனை­யத்­தில் நேற்று 'சிஎம்ஏ சிஜி­எம் ஸ்கேண்­டோலா' எனும் கொள்­க­லன் கப்­ப­லில் இருந்து கொள்­க­லன்­களை ஏற்றி இறக்­கி­ய­போது, சிங்­கப்­பூ­ரின் முதல் திரவ இயற்கை எரிவாயு நிரப்­புக் கப்­ப­லான 'ஃபியூல்­எல்­என்ஜி பெலினா' மூலம் அந்­தக் கொள்­க­லன் கப்­ப­லுக்கு 7,100 கன­மீட்­டர் திரவ இயற்கை எரிவாயு நிரப்­பப்­பட்­டது.

இப்­ப­டிச் சரக்­கு­க­ளைக் கையா­ளும்­போதே ஒரு கப்­ப­லில் இருந்து இன்­னொரு கப்­ப­லில் திரவ இயற்கை எரிவாயு நிரப்­பப்­பட்­டது ஆசி­யா­வில் இதுவே முதன்­முறை என்று போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹோங் டாட் குறிப்­பிட்­டார்.

இவ்­வாறு சரக்­கு­களை ஏற்றி இறக்­கும்­போதே எரி­பொ­ருள் நிரப்­பப்­ப­டு­வ­தால் கப்­பல்­கள் துறை­முகத்­தில் நிற்க வேண்­டிய நேரம் குறை­கிறது.

மேலும், எல்­என்ஜி மூலம் இயங்­கும் பெரிய அள­வி­லான கப்­பல்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்து எரி­பொ­ருள் நிரப்­பிச் செல்ல முடி­யும்.

உல­கி­லேயே ஆகப் பெரிய கடல்­துறை எரி­பொ­ருள் நிரப்பு மைய­மாக சிங்­கப்­பூர் திகழ்ந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த வகை­யில், ஒவ்­வோர் ஆண்­டும் ஏறக்­கு­றைய 50 மில்­லி­யன் டன் எரி­பொ­ருளை சிங்கப்­பூர் விற்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், ஆசி­யா­வி­லும் அதற்­கப்­பா­லும் கப்­பல் மூலம் இன்­னொரு கப்­ப­லுக்கு திரவ இயற்கை எரிவாயு எரி­பொ­ருள் நிரப்­பு­வ­தில் முன்­னணி மைய­மா­கத் திக­ழ­வேண்­டும் என இலக்கு கொண்­டுள்ள சிங்­கப்­பூருக்கு நேற்­றைய நட­வடிக்கை ஒரு முக்­கிய படிக்­கல்­லா­கப் பார்க்­கப்­படு­கிறது.

'ஃபியூல்­எல்­என்ஜி பெலினா' கப்­பல் 7,500 கன­மீட்­டர் கொள்­ளளவு கொண்­டது என்­றும் வரும் மாதங்­களில் அது மேலும் பல கொள்­க­லன் கப்­பல்­க­ளுக்குத் திரவ இயற்கை எரி­வா­யுவை விநி­யோ­கிக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­ பட்டது.