வரும் ஞாயிற்றுக்கிழமை 28ஆம் தேதி பங்குனி உத்திரத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 27ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணியில் இருந்து 28ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ஈசூன் தொழிற்பூங்கா 'ஏ'யின் ஒரு பகுதி வாகனப் போக்குவரத்திற்கு மூடப்படும். வாகனமோட்டிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் அப்பகுதியில் பாதுகாவல் அதிகாரிகள் பணியமர்த்தப் பட்டிருப்பர். அவ்வேளையில், போலிஸ் மற்றும் அவசர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். வாகனத்தை நிறுத்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படும். கூடுதல் விவரங்களுக்கு 6756 1912 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பங்குனி உத்திரம்: போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றி போலிஸ் அறிவிப்பு
1 mins read
-

