குழாய் வேலை துறைக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் திறன் மேம்பாடு, சிறந்த வேலைவாய்ப்புக்கு 10 ஆண்டு செயல்திட்டம்

குழாய் வேலை துறைக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் திறன் மேம்பாடு, சிறந்த வேலைவாய்ப்புக்கு 10 ஆண்டு செயல்திட்டம்

2 mins read
be0586c1-e326-4770-ad7c-8b21abc9d832
-

சிங்­கப்­பூ­ரில் குழாய் வேலை பார்ப்­போர் (பிளம்­பர்ஸ்) தங்­கள் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் சிறந்த வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெற­வும் 10 ஆண்டு செயல் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய தொழில்­நுட்­பத்­திற்கு மாறு­தல், இத்­துறை வல்­லு­நர்­க­ளுக்­கான பயிற்சி உள்­ளிட்ட, புதிய பொரு­ளி­ய­லுக்கு இத்­து­றை­யைத் தயார்­ப்ப­டுத்­தும் வகை­யில், இத்­து­றை­யின் 10 ஆண்டு செயல்­பாடு, தொழில்­நுட்­பம் குறித்த திட்­டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­து­றையை மாற்றி அமைப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் பிரிவு சிங்­கப்­பூர் குழாய் வேலை சங்­கத்­து­ட­னும் ஏழு சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளு­ட­னும் நேற்று கையெ­ழுத்­திட்­டது.

இத்­து­றை­யின் ஊழி­ய­ரணி மூப்­ப­டைந்து வரும் நிலை­யில் இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் ஏறக்­கு­றைய 900 உரி­மம் பெற்ற குழாய் வேலை தொழி­லர்­கள் உள்­ளனர்.

இவர்­களில் முக்­கால் வாசிப்­பேர் 50 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் என்று குழாய் வேலை சங்­கத்­தின் தலை­வர் திரு டான் வீ டெக் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கூறி­னார்.

"இது தொடர்ந்­தால், சிங்­கப்­பூர் மக்­க­ளுக்­குச் சேவை­யாற்ற போதிய குழாய் வேலை தொழி­லர்­கள் இல்­லா­மல் போகும் நிலை ஏற்­ப­ட­லாம்," என்­றார் அவர்.

"இத்­து­றைக்கு இளை­யர்­களை ஈர்ப்­பது எளி­தா­ன­தல்ல. "பாரம்­பரி­ய­மா­கவே குழாய் வேலை என்­பது வாழ்க்­கைத் தொழில் தேர்­வாக இருப்­ப­தில்லை. எவ­ரும் இந்த வேலை­யைத் தேர்வு செய்­வ­தில்லை. ஆனால், இந்தப் பொது மனப்­பான்­மையை மாற்ற வேண்­டும்," என்று திரு டான் கூறி­னார்.

இத்­து­றையை மாற்றி அமைப்­பதை விரை­வு­ப­டுத்­து­மாறு இத்­து­றை­யின் பங்­கா­ளி­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இதில் புதி­தாக உரி­மம் பெற்­ற­வர் $4,000 வரை சம்­பா­திக்­க­லாம். அனு­ப­வம் உள்­ள­வர் $6,000 வரை சம்­ப­ளம் ஈட்­ட­லாம். முறைப்­படுத்­தப்­பட்ட தண்­ணீர் சேவை­கள், சுத்­தி­க­ரிப்­புப் பணி­களை பொதுப் பய­னீட்­டுக்­க­ழ­கத்­தின் உரி­மம் பெற்­ற­வர்­க­ளால் மட்­டுமே மேற்­கொள்ள முடி­யும்.

குழாய் வேலை­க­ளுக்­கான கட்­ட­ணத்­தில் வெளிப்­ப­டைத்­தன்மை இன்மை, உரி­மம் இல்­லா­த­வர்­கள் இத்­து­றை­யில் இருப்­ப­தால் வேலை தர­நி­லை­களில் மாறு­பாடு போன்ற சவால்­களை இத்­துறை எதிர்­நோக்கு­கிறது.

புதிய செயல்­திட்­டத்­தின் கீழ், நிறு­வ­னங்­க­ளி­டம் தொழில்­நுட்­பப் பயன்­பாடு ஊக்­கு­விக்­கப்­ப­டு­கிறது. மேலும், குழாய் வேலை­கள், சுத்­தி­க­ரிப்பு தொடர்­பான படிப்­புக்கு அங்­கீ­கா­ரம் பெற்ற பயிற்­சிக் கழ­கத்தை அமைக்­க­வும், சிறந்த செயல்­மு­றை­க­ளுக்­கான ஓர் ஆணை­யத்தை உரு­வாக்­க­வும் திட்­ட­ம் உள்­ளது.

எதிர்­கால குழாய் வேலை தொழி­லர்­களை உரு­வாக்க இந்த 10 ஆண்டு செயல் திட்­டம் உத­வும். புதிய தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி, தங்­கள் வேலையை மேலும் சிறப்­பா­கச் செய்ய முடி­வ­து­டன், புதிய பொரு­ளி­ய­லில் இந்­தத் தொழிலை சாத்­தி­ய­மா­ன­தாக வைத்­தி­ருக்க இய­லும் என்று கூறி­னார் என்­டி­யுசி பொதுச்­செ­ய­லா­ளர் இங் சீ மெங்.

இந்த செயல் திட்­டத்­திற்கு ஒரு பால­மா­கச் செயல்­ப­டு­வ­து­டன், இத்­து­றையை நிபு­ணத்­து­வ­ம் உடையதாக மாற்றுவதற்கு தேவை­யா­ன­வர்­களை ஈடு­ப­டுத்­தும் பணி­யில் என்­டி­யுசி கவ­னம் செலுத்­தும். குழாய் வேலை செய்­வோரை கிடைக்­கும் வேலை­யைச் செய்­வோர் பிரிவில் இணைக்கும் ­திட்­டம் இல்லை.