பொட்டலமிடுதலில் விரயத்தை குறைத்த 15 நிறுவனங்களுக்கு விருது

பொட்டலமிடுதலில் விரயத்தை குறைத்த 15 நிறுவனங்களுக்கு விருது

1 mins read
fdf5fbab-5276-475b-a668-9a9f4ac96d8d
-

வளங்களை திறனோடு, கச்சிதமாகப் பயன்படுத்தும் முயற்­சி­யாக உற்­பத்தி நிறு­வ­ன­மான 'மைக்­ரோ­வேவ் பேக்­கே­ஜிங்' அதன் அட்­டைப் பெட்­டி­க­ளின் வடி­வ­மைப்­பைப் புதுப்­பித்­துள்­ளது, தற்­போது ஓர் அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி ஒரே நேரத்­தில் ஆறு பெட்­டி­களை அச்சிடு­கிறது. முன்­னர் இது நான்கு பெட்­டி­க­ளாக இருந்­தது. இதன் விளை­வாக இந்­நி­று­வனத்­தில் ஆண்­டு­தோ­றும் சுமார் 70 டன் பொட்­ட­ல­மி­டு­தல் பொருட்­கள் குறைக்­கப்­ப­டு­கின்­றன.

பொட்டலமிடுதலில் விரயத்தைக் குறைத்த இந்நிறுவனம், சிங்­கப்­பூர் பொட்­ட­ல­மி­டு­தல் ஒப்­பந்த விரு­து­களில், சிறிய-நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வின் கீழ் சிறந்த சாதனை விருதைப் பெற்­றது.

பொட்­ட­ல­மி­டப் பயன்­ப­டுத்­தப்­படும் பொருட்­க­ளின் அள­வைக் குறைத்­த­தன் மூலம் விரயத்தை குறைத்த 15 நிறு­வ­னங்­கள் நேற்று சிங்­கப்­பூர் பொட்­ட­ல­மி­டு­தல் ஒப்­பந்த விரு­து பெற்றன.

வர்த்­த­கங்­கள், பொட்­ட­ல­மி­டு­த­லில் விரயத்தை நிலை­யான முறை­யில் நிர்­வ­கிக்கும் ஒரு திட்­ட­மும் சிங்­கப்­பூர் உற்­பத்தி சம்­மே­ளனத்­தின் கட்­ட­டத்­தில் நேற்று நடை­பெற்ற விழா­வில் அறி­விக்­கப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 1 முதல் பிப்­ர­வரி 29ஆம் தேதி வரை பொட்­ட­ல­மி­டு­த­லில் விரயத்தைக் குறைப்­ப­தில் குறிப்­பி­டத்­தக்க முயற்­சி­களை மேற்­கொண்ட, சிங்­கப்­பூர் பொட்­ட­ல­மி­டு­தல் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்ள வர்த்­த­கங்­களை இந்த விரு­து­கள் அங்­கீகரித்­தன.

மொத்­தம் 10 பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் அல்­லது பெரிய உள்­ளூர் நிறு­வ­னங்­கள், ஐந்து சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பொட்­ட­ல­மி­டு­த­லில் விரயத்தைக் குறைத்­தல், மறு­ப­ய­னீடு அல்­லது மறு­சு­ழற்சி செய்­தல், மறு­சு­ழற்சி செய்­யப்­பட்ட பொருட்­க­ளின் பயன்­பாடு ஆகி­ய­வற்­றிற்­கான முயற்­சி­க­ளுக்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

சிங்­கப்­பூர் பொட்­ட­ல­மி­டு­தல் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்ள 100க்கும் மேற்­பட்ட தொழில்­கள் விரயத்தைக் குறைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளுக்கு அங்­கீ­கா­ரம் பெற்றன.