வசதி குறைந்தோருக்கு உதவும் சமூகக் கடை

உதவி தேவைப்­படும் குடும்­பங்­கள் இல­வ­ச­மா­கப் பொருள்­க­ளைப் பெற்றுச் செல்ல வாய்ப்­ப­ளிக்­கும் வித­மாக பூன் லே வட்­டா­ரத்­தில் சமூகக் கடை ஒன்று நேற்று திறக்­கப்­பட்­டது.

புளோக் 176 பூன் லே டிரை­வில் அமைந்­துள்ள அக்­க­டையை 'ஃபுட் ஃபிரம் தி ஹார்ட்' எனும் அற­நி­று­வ­னம், ஓசி­பிசி வங்­கி­யின் ஆத­ர­வு­டன் நடத்­து­கிறது.

இல­வ­ச­மாக வாங்­கிச் செல்­வது எனும் கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் சமூ­கக் கடை­கள் செயல்­ப­டு­கின்­றன. பய­னா­ளி­கள் அக்­க­டை­க­ளுக்­குச் சென்று தங்­க­ளுக்­குத் தேவை­யா­ன­தைப் பெற்­றுச் செல்­ல­லாம்.

வசதி குறைந்­தோ­ருக்கு முன்­தயா­ரிக்­கப்­பட்ட அன்­ப­ளிப்­புப் பொட்­ட­லங்­களை வழங்­கு­வ­தற்­குப் பதி­லாக, இந்­தக் கடை அவர்­க­ளுக்­குத் தேவை­யான பொருட்­களை அவர்­களே தேர்வு செய்ய வழி­செய்­கிறது. பய­னா­ளர் ஒரு மாதத்­தில் பல்­வேறு வகை­யான உண­வுப் பொருட்­களில் 12 பொருட்­க­ளைத் தேர்வு செய்ய லாம்.

இந்­தக் கடை தற்­போது உதவி தேவைப்­படும் 350 குடும்­பங்­க­ளுக்­குச் சேவை­யாற்­று­கிறது. இந்த ஆண்டு இறு­திக்­குள் 1,000 குடும்­பங்­களை எட்ட வேண்­டும் என்­பது இலக்கு. இது இரண்­டா­வது சமூ­கக் கடை­யா­கும். கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் மவுண்ட்­பேட்­ட­னில் ஒரு கடை திறக்­கப்­பட்­டது.

தேசிய வளர்ச்சி அமைச்­ச­ரும் சமூக சேவை­கள், சமூக சேவை­க­ளின் ஒருங்­கி­ணைப்­புக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான டெஸ்­மண்ட் லீ நேற்று பூன் லே சமூ­கக் கடையை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்து வைத்­தார்.

நன்­கொடை உணவு பங்­கீட்டை சிறந்த வழி­யில் ஒருங்­கி­ணைக்­க­வும் உணவு விர­யத்­தைக் குறைக்­க­வும் சமூ­கக் கடை உத­வு­வ­தாக அவர் கூறி­னார்.

பூன் லே, மவுண்ட்­பேட்­டன் ஆகிய இடங்­களில் உள்ள இரு கடை­க­ளி­லும் எல்லா நாட்­க­ளி­லும் 24 மணி நேர­மும் பொது­மக்­கள் உண­வுப் பொருள் நன்­கொ­டை­களை வழங்­க­லாம்.

இந்­தக் கடை­யின் குடும்­பங்­க­ளுக்­குத் தேவை­யான நேரத்­தில் அவர்­கள் விரும்­பும் பொருட்­க­ளைத் தேர்­வு­செய்­யும் உரி­மையை வழங்­கு­கிறது என்று திரு லீ கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!