கற்றல் முறைகள்: ஓர் ஆய்வு மையம்

கற்றல் முறைகள்: ஓர் ஆய்வு மையம்

2 mins read
f3d18154-c412-4a7c-81a1-af60973c3004
-

நரம்­பி­ய­லி­லும் பிற துறை­க­ளி­லும் ஆராய்ச்சி மேற்­கொள்­ளும் மாண­வர்­க­ளுக்கு பய­னுள்ள கற்­றல் முறை­கள், கரு­வி­களை உரு­வாக்­கு­வதை நோக்­க­மா­கக் கொண்ட ஆராய்ச்சி மையம் தேசிய கல்­விக் கழ­கத்­தில் திறக்­கப்­பட்­டுள்­ளது.

கல்வி நிலை­யத்­தில் கற்­றல் அறி­வி­யல் (சோலெக்) எனப்­படும் இந்த மையம், கல்வி, அறி­வி­யல் ஆகிய இரண்­டி­ன் புரி­தல்­களை ஒன்­றி­ணைக்­கும்.

மேலும் அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் குறிப்­பாக கற்­றலில் சிர­மம் உள்­ள­வர்­க­ளுக்கு ஆய்வு, கல்­வித் திட்ட வடி­வ­மைப்­பு­க­ளாக ஆக்­கும்.

நரம்­பி­யல், அறி­வாற்­றல் அறி­வி­யல், உள­வி­யல், தொழில்­நுட்­பம், கல்வி உள்­ளிட்ட பல்­வேறு துறை­கள் சார்ந்த ஆய்­வி­யல் அறி­ஞர்­களை 'சோலெக்' ஒன்­றி­ணைக்­கிறது என்று நேற்று தேசிய கல்­விக் கழ­கம் தெரி­வித்­தது.

இந்­தத் துறை­கள் ஒவ்­வொன்­றி­லும் மேற்­கொள்­ளப்­படும் ஆய்­வு­கள், கற்­றல் செயல்­மு­றை­க­ளைப் பற்­றிய ஆழ­மான புரி­த­லுக்­கும் வெற்­றி­க­ர­மான பள்ளி கற்­றலுக்கு உதவும் வழி­க­ளைப் பற்­றிய சிறந்த புரி­த­லுக்­கும் பங்­க­ளிக்­கும் என்று கழ­கம் கூறி­யது.

நன்­யாங் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கம் (என்­டியு), தேசிய கல்­விக் கழ­கத்­தில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் இரண்டு சோதனை அறை­க­ளை­யும் ஒரு வகுப்­ப­றை­யை­யும் கொண்­டுள்­ளது.

"அனைத்து மாண­வர்­க­ளின், குறிப்­பாக கற்­றல் சிர­மங்­கள் உள்­ள­வர்­க­ளின் மனித கற்­றல் திற­னைப் புரிந்­து­கொள்­ள, மேம்­ப­டுத்திக் கொள்ள இப்­போது வாய்ப்­புக் கிடைத்­துள்­ளது," என்­றார் இந்த புதிய மையத்­தில் இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் டேவிட் ஹங்.

"மாண­வர்­கள் அனை­வ­ரும் வாழ்­நாள் முழு­வ­தும் கற்­ப­வர்­க­ளாக இருக்க இந்த மனித கற்­றல் திறன் முக்­கி­ய­மா­னது" என்­றார் தேசிய கல்­விக் கழ­கத்­தின், கல்வி ஆராய்ச்­சித் துறை தலை­வ­ரு­மான பேரா­சி­ரி­யர் ஹங்.

"கற்­றலை ஊக்­கு­வித்­தல், கற்­பித்­தலை மாற்­றி­ய­மைத்­தல், ஆராய்ச்­சியை மேம்­ப­டுத்­து­தல்" ஆகிய கல்­விக் கழ­கத்­தின் நோக்­கத்­தின் ஒரு பகுதி இந்த மையம் என்று தெரிவித்தார் தேசிய கல்விக் கழக இயக்குநர் கிறிஸ்டின் கோ.