அவதூறு வழக்கு: பிரதமருக்கு $133,000 வழங்க உத்தரவு

அவதூறு வழக்கு: பிரதமருக்கு $133,000 வழங்க உத்தரவு

2 mins read
aeeb7db1-a148-4a60-a731-b23579faaf33
-
multi-img1 of 2

பிர­த­மர் லீ சியன் லூங் தொடர்­பில் இணை­யச் செய்தி ஒன்றை ஃபேஸ்புக்­கில் பகிர்ந்­து­கொண்ட வலைப்­ப­தி­வா­ளர் லியோங் ஸீ ஹியன் (கீழ்ப்­ப­டம்), இழப்­பீ­டாக பிர­த­ம­ருக்கு $133,000 தர வேண்­டும் என்று உயர் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

மலே­சி­யா­வின் 1எம்­டிபி பண மோச­டி­யு­டன் பிர­த­மர் லீயைப் பொய்­யா­கத் தொடர்­பு­ப­டுத்­தும் இணை­யச் செய்தி ஒன்றை 'தி கவ­ரேஜ்' இணை­யத்­த­ளம் வெளி­யிட்­டி­ருந்­தது. அதை­ய­டுத்து, திரு லியோங் அச்­செய்­தி­யைத் தமது ஃபேஸ்புக்­கில் பகிர்ந்­து­கொண்­டார்.

உண்­மை­யைக் கண்­ட­றிய எந்த ஒரு முயற்­சி­­யும் எடுக்­கா­மல் திரு லியோங் அவ்­வாறு செய்­தி­ருப்­ப­தாக நீதி­பதி அய்­டிட் அப்­துல்லா தமது எழுத்­து­பூர்வ தீர்ப்­ப­ளிப்­பில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"அவ­தூ­று வாசகங்களுக்கு மன்­னிப்பு கோர மறுத்­த­தை­யும் வைத்­துப் பார்க்­கும்­போது, தீய நோக்கம் தெரி­கிறது," என்­றார் நீதி­பதி.

அவ­தூறு வழக்கு தொடர்­பில் பிர­த­மர் லீயின் வழக்­க­றி­ஞர்­கள் $150,000ஐ இழப்­பீ­டா­கக் கோரி­யிருந்­த­னர். முன்­ன­தாக வலைப்­பதி­வா­ளர் ராய் ஙெர்ங் தொடர்­பான அவ­தூறு வழக்­கில் இத்­தொகை வழங்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், திரு லியோங் தொடர்­பான வழக்­கில், அதே தொகை­யைத் தர­வேண்­டும் என்று தீர்ப்­ப­ளிக்க ஒரு குறிப்­பிட்ட வரம்பு இருப்­ப­தாக நீதி­பதி கூறி­னார்.

"இந்த வழக்­கில் காணப்­படும் அவ­தூறு, நீதி­மன்­றத்­திற்கு இது­வரை வந்த இது­போன்ற வழக்­கு­களி­லி­ருந்து மாறு­பட்­டது.

"செய்தி பொய் என்று தெரிந்­தும் வேண்­டு­மென்றே அதைப் பிர­தி­வாதி பதி­வேற்­றம் செய்­ய­வில்லை. அதோடு, தெள்­ளத்­தெ­ளி­வான ஆதா­ரங்­கள் இருந்­தும் தமது அவ­தூறு கூற்­று­கள் உண்மை என்று பிர­தி­வாதி இறு­தி­வரை பிடி­வா­த­மும் பிடிக்­க­வில்லை," என்­றார் நீதி­பதி அய்­டிட்.

இந்­நி­லை­யில், செல­வு­கள் தொடர்­பில் தாம் அதைத் தனி­யாகக் கையா­ள­வி­ருப்­ப­தா­க­வும் நீதி­பதி குறிப்­பிட்­டார்.

இதை­ய­டுத்து, இவ்­வி­வ­கா­ரம் நீதி­ப­தி­யால் முடி­வெ­டுக்­கப்­பட்­டது என்­றும் இது தொடர்­பில் பிர­த­மர் லீக்கு மேற்­கொண்டு கருத்து ஏது­மில்லை என்­றும் பிர­த­ம­ரின் ஊட­கச் செய­லா­ளர் சாங் லி லின் தெரி­வித்­தார்.