குடியேறிகள் தொடர்பில் இளையரிடையே ஆக்கபூர்வ சிந்தனை

குடியேறிகள் தொடர்பில் இளையரிடையே ஆக்கபூர்வ சிந்தனை

2 mins read
bc5b6979-108f-46d2-ba31-09109521c8db
-

இளம் சிங்­கப்­பூ­ரர்­கள், அதிக வரு­மா­னம் ஈட்­டும் சிங்­கப்­பூ­ரர்­கள் ஆகி­யோர் குடி­யேறி­கள் தொடர்­பில் கூடு­த­லாக ஆக்­க­பூர்வ சிந்­தனை கொண்­டி­ருப்­ப­தாக கொள்கை ஆய்­வுக் கழ­கம் கண்­ட­றிந்­துள்­ளது.

அதி­கக் கல்­வித் தகுதி உள்­ள­வர்­கள், கூடு­தல் சம்­ப­ளம் பெறு­ப­வர்­கள், பெரிய வீட­மைப்பு வகை­களில் வசிப்­ப­வர்­கள் ஆகி­யோர் குடி­யே­றி­கள் மற்­றும் குடி­நு­ழைவு தொடர்­பி­லான பொரு­ளி­யல் தாக்­கம் குறித்­துக் கூடு­தல் ஆக்­கப்­பூர்வ சிந்­தனை கொண்­டுள்­ள­னர்.

இருப்­பி­னும், இதே குடி­யே­றி­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய சமூக, கலா­சார விளை­வு­கள் தொடர்­பில் ஆக்­க­பூர்வ சிந்­தனை சற்று குறைந்­தி­ருந்­த­தாக ஆய்வு முடி­வு­கள் தெரி­வித்­தன.

சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகிய இரு தரப்­பி­ன­ரும் குடி­யே­றி­கள் தொடர்­பில் கூடு­த­லாக ஆக்­க­பூர்வ சிந்­தனை கொண்­டுள்­ளது ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டிய ஒன்று அல்ல.

ஏனெ­னில், ஒரு கட்­டத்­தில் அவர்­களும் அதே குடி­யே­றி­க­ளாக இங்கு வந்­த­வர்­கள் என்­பதே இதற்­குக் கார­ண­மா­கும்.

வச­தி­கு­றைந்த சிங்­கப்­பூ­ரர்­கள், பொரு­ளி­யல் மற்­றும் வேலை­வாய்ப்பு ரீதி­யாக குடி­யே­றி­கள் மிரட்­டல் அளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரின் வள­ரச்­சி­யில் குடி­யே­றி­களின் தாக்­கம் குறித்து சிங்­கப்­பூ­ரர்­கள் 45.1 விழுக்­காட்­டி­ன­ரால் முடி­வெ­டுக்க முடி­ய­வில்லை.

இருப்­பி­னும், குடி­யே­றி­க­ளால் தங்­க­ளின் நாட்டு வளர்ச்சி வெகு­வா­கப் பாதிக்­கப்­படு­வ­தாக மலே­சிய, தாய்­லாந்து, ஆஸ்­திரே­லிய நாட்டு மக்­களில் 40 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஆய்­வில் தெரி­வித்­த­னர்.

கலா­சார பன்­மு­கத்­தன்­மை­யைக் குடி­யே­றி­கள் வலுப்­ப­டுத்­து­கின்­ற­னர் என்று கூறப்­ப­டு­வ­தற்கு சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், இளம் சிங்­கப்­பூ­ரர்­கள் ஆகி­யோர் ஆத­ர­வ­ளித்­த­னர்.

மூத்த சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் சிங்­கப்­பூ­ரி­லேயே பிறந்­த­வர்­கள், சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­யும் வெளி­நாட்­ட­வர் எண்­ணிக்­கை­யின் வரம்பு மேலும் கடு­மை­யாக்­கப்­பட வேண்­டும் என்று ஆய்­வில் தெரி­வித்­திருந்­தனர்.

குடி­நு­ழைவு கார­ணத்­தால் சிங்­கப்­பூ­ரில் வேலை­யின்மை அதி­க­ரித்­த­தாக, 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் கிட்­டத்­தட்ட 50 விழுக்­காட்­டி­னர் கூறி­யி­ருந்­த­னர். 21க்கும் 35க்கும் இடைப்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­களில் இதே கருத்து குறித்து 38.4 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ஆமாம் என்று தெரி­வித்­தி­ருந்­த­னர்.

குடி­யே­றி­க­ளால் சமூக மோதல்­கள் ஏற்­படு­வது தொடர்­பில் உள்­ளூ­ரி­லேயே பிறந்­த­வர்­க­ளுக்­கும் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­கள் மற்­றும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் இடையே குறிப்­பி­டத்­தக்க வேறு­பாடு இருந்­த­தும் ஆய்­வில் தெரி­ய­வந்­தது.