அமைச்சர் பாலகிருஷ்ணனின் இந்தோனீசிய பயணம்

அமைச்சர் பாலகிருஷ்ணனின் இந்தோனீசிய பயணம்

1 mins read
2ef3bb86-1a05-4389-83ae-020899dc521c
-

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவயன் பாலகிருஷ்ணன், இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெத்னோ மார்சுடியை ஜகார்த்தாவில் வியாழக்கிழமையன்று சந்தித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை மறுவுறுதிப்படுத்த இவர்கள் இருக்கும் இடையிலான இரண்டு நாள் சந்திப்பு தொடங்கியுள்ளது.

தாம் தங்கியிருந்த ஹோட்டலில் தமக்கும் சிங்கப்பூர் குழுவினருக்கும் பாரம்பரிய இந்தோனீசிய பலகாரங்களை திருவாட்டி ரெட்னோ தங்களை வரவேற்பதற்காக விட்டுச் சென்றுவிட்டதாக டாக்டர் பாலகிருஷ்ணன் பேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவையும் வேறு சில பழைய நண்பர்களையும் பார்க்கப்போவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் தமது பதிவில் தெரிவித்தார்.

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் கொவிட்-19லிருந்து மீண்டு வருகையில் அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது இந்த வருகையின் நோக்கம் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.