அமைச்சர் லாரன்ஸ் வோங்: வெளிநாட்டு ஊழியர் நடமாட்டக் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும்

அமைச்சர் லாரன்ஸ் வோங்: வெளிநாட்டு ஊழியர் நடமாட்டக் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும்

2 mins read
751b0bc1-4a0f-4eb1-afa0-b37e54f002ae
-

வெளி­நாட்டு ஊழி­யர் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்­கான திட்­டங்­கள் கட்­டம் கட்­ட­மாக நடப்­புக்கு வரும் என்று கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான லாரன்ஸ் வோங் புதன்­கி­ழமை தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களில் மேலும் பல­ருக்குத் தடுப்­பூசி போடப்­ப­டு­வ­தை­யும் கிரு­மித்­தொற்று கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தை­யும் கருத்­தில் கொண்டு அத்­த­கைய நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளரும் என்றாரவர்.

மற்­ற­வர்­க­ளை­விட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஏன் அதிக கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கின்­றன என்­றும் அவர்­கள் எப்­போது சுதந்­தி­ர­மாக நட­மாட அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றும் செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் கேட்­கப்­பட்­டதற்குப் பதி­ல­ளித்­த­போது கல்வி அமைச்­ச­ரு­மான திரு வோங் இவ்­வாறு கூறி­னார்.

குறிப்­பிட்ட வெளி­நாட்டு ஊழி­யர் தங்கு விடு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மாதம் ஒரு முறை சமூ­கத்­து­டன் கலந்­து­ற­வாட வகை செய்­யும் ஒரு முன்­னோடி திட்­டம் சென்ற டிசம்­ப­ரில் அறி­விக்­கப்­பட்­டது.

ஊழி­யர்­கள் எந்த அள­வுக்கு வழக்­க­மான பரி­சோ­த­னை­களுக்கு இணங்கி நடக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் இதர கட்­டுப்­பா­டு­களை அவர்­கள் எந்த அள­வுக்­குப் பின்­பற்றி நடந்­து­கொள்­கி­றார்­கள் என்­ப­தைப் பொறுத்­தும் அது இடம்பெறும்.

அந்த முன்­னோடி திட்­டம் தொடங்­கு­வ­தற்­கான கால நேர விவ­ரங்­க­ளைப் பற்றி சிறப்­புப் பணிக்­குழு எதை­யும் தெரி­விக்­க­வில்லை.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே கொவிட்-19 தொற்று சம்­ப­வங்­கள் கணி­ச­மான அள­வுக்­குக் குறைந்து இருக்­கின்­றன. என்­றா­லும் அத்­த­கைய ஊழி­யர்­கள் தங்கு விடு­தி­களின் நில­வ­ரங்­கள் வேறு­பட்­டவை என்று அமைச்­சர் கூறி­னார்.

ஒரு­வ­ருக்குத் தொற்று ஏற்­பட்­டா­லும் இதர பல ஊழி­யர்­கள் வேக­மாக பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு அத்­த­கைய விடு­தி­களில் அதி­கம் என்­பதை அவர் சுட்­டி­னார்.

விடு­தி­களில் ஊழி­யர்­கள் நெருக்­க­மாக வசிப்­ப­தைக் குறைக்க முயற்­சி­கள் இடம்­பெற்று இருக்­கின்­றன. அதோடு மட்­டு­மின்றி பாது­காப்பு நடை­மு­றை­கள் நடப்­பில் உள்­ளன. இருந்­தா­லும் அங்கு கிருமி வேக­மாக பர­வும் ஆபத்து அதி­கம் என்­பதை அமைச்­சர் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூ­ரில் இன்­ன­மும் கொவிட்-19 கிருமி முற்­றி­லும் ஒடுங்கி­வி­ட­வில்லை என்­ப­தால் விடு­தி­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள், பொது­மக்­க­ளு­டன் தாரா­ள­மாக கலந்­து­ற­வாட அனு­ம­திப்­பது ஆபத்­தா­னது என்று பிபி­சிக்கு மார்ச் 14ல் அளித்த பேட்­டி­யில் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்தார்.

இவை எல்­லா­வற்­றை­யும் கருத்­தில் கொண்டு மிக­வும் எச்­ச­ரிக்கை­யான அணு­கு­மு­றையை அர­சாங்­கம் எடுத்து வரு­வ­தா­க­வும் நில­வ­ரங்­கள் மேம்­ப­டும்­போது கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­படும் என்­றும் திரு வோங் தெரி­வித்­தார்.