ஐந்–தில் இரு பாதுகாவ–லருக்கு துன்–பு–றுத்–தல்: ஆய்வு கொேரானா கொள்–ளை–நோய் தாக்–கம்

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லில் தாங்­கள் அதிக துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யுள்­ள­தாக பாது­காவல் பணி­யில் ஈடு­பட்­டி­ருப்­போர் தெரி­வித்­துள்­ள­னர். இது கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­துக்­கும் நவம்­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த ஆய்­வில் பங்­கேற்ற 1,002 பாது­கா­வ­லர்­களில் ஐந்­தில் இரு­வர் தாங்­கள் ஏதா­வ­தொரு வகை­யில் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யுள்­ள­தாக விளக்­கி­னர்.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் பங்­கேற்ற 707 பாது­கா­வ­லர்­களில் மூன்­றில் ஒரு­வர் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­னது தெரி­ய­வந்­துள்­ளது.

இது­பற்­றிக் கருத்­து­ரைத்த பாது­கா­வ­லர்­கள் சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ளர் ஸ்டீவ் டான், பாது­கா­வ­லர்­கள் பெரும்­பா­லும் வசை­பா­ட­லுக்கு ஆளா­கின்­ற­னர் என்றார்.

இதற்கு ஒரு கார­ணம் கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லில் பாது­காப்பு தூர இடை­வெளி நட­வ­டிக்­கை­க­ளின் ஓர் அம்­ச­மாக தாங்­கள் கூடு­தல் சோத­னை­களை நடத்த வேண்­டி­யி­ருந்­ததை அவர் சுட்­டி­னார். மேலும், தூர இடை­வெளி விதி­களை கடைப்­பி­டிக்­கு­மாறு தங்­கள் முத­லா­ளி­க­ளி­டம் இருந்து வந்த நெருக்­கு­து­லும் கார­ணம் என அவர் கூறி­னார்.

"இதி­லி­ருந்து தெளி­வா­கத் தெரி­வது என்­ன­வென்­றால், பணி­யி­டங்­களில் பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது என்­ப­து­தான்," என அவர் தெரி­வித்­தார்.

பாது­கா­வ­லர்­க­ளின் வேலை­யிட சூழல், அவர்­க­ளின் நலன், சம்­பள பிரச்­சி­னை­கள் போன்­வற்றை ஆராய்­வ­தற்­காக இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆய்வை சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­க­மும் பாது­கா­வ­லர் சங்­க­மும் இணைந்து மேற்­கொண்­டன.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் பதிவு பெற்­றுள்ள சங்­க­மாக விளங்­கும் இதில் 18,158 உறுப்­பினர்­கள் உள்­ள­னர்.

இதில் ஆகக் கடை­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் 37.2 விழுக்­காட்­டி­னர் தாங்­கள் வசை­பா­ட­லுக்கு ஆளா­கி­ய­தா­கக் கூறினர். மேலும் 4.8 விழுக்­காட்­டி­னர் தாங்­கள் வசை­மொழி, தாக்­கு­தல் என இரு விதத்­தி­லும் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­ன­தா­கத் தெரி­வித்­தனர்.

"பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளுக்கு பாது­காப்பு வேண்­டும் என்­பது இதிலி­ருந்து தெள்­ளத்­தெ­ளி­வா­கத் தெரி­கிறது," என்றார் திரு டான்.

இதன் தொடர்­பில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் உள்­துறை அமைச்­சின் அறிக்­கையை திரு டான் சுட்­டி­னார். அதில், பாது­கா­வ­லர்­களை துன்­பு­றுத்­த­லில் இருந்து பாது­காக்க, தனி­யார் பாது­காப்­புத் துறை தொடர்­பான சட்­டத்­தில் திருத்­தம் கொண்டு வரப்­ப­ட­லாம் என்று கூறப்படுகிறது.

அத்­து­டன், இது­போன்ற துன்­பு­றுத்­தல் சம்­ப­வங்­களை எதிர்­கொள்ள சங்­கம் ஒரு செய­லியை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ள­தாக அவர் விளக்­கி­னார். அதன்­மூ­லம் பாது­கா­வ­லர்­கள் தங்­க­ளுக்கு எதி­ரான துன்­பு­றுத்­தல், மற்ற பணி தொடர்­பான குறை­பா­டு­க­ளைக் கூற­லாம் என திரு டான் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!