'ஜயண்ட்' பேரங்காடி நேற்று முதல் 100க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சராசரியாக 20% மலிவாக விற்பனை செய்கிறது. கொவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது பொருளியல் நிச்சயமற்ற நிலையில் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்தத் தள்ளுபடி விற்பனை இடம்பெறுகிறது. ஜயண்ட், கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடிகளை இயக்கும் டெய்ரி ஃபார்ம் குழுமம், இதில் உணவுப் பொருள் அல்லாத பொருட்களும் இடம்பெறும் எனக் கூறிள்ளது. ஜயண்ட் பேரங்காடி கடந்த ஆண்டு 650 பொருட்களின் விலையை குறைத்தது. $17 மில்லியன் இயக்கத்தை மேலும் ஒன்பது மாதங்களுக்கு விரிவுபடுத்தவும் நீட்டிக்கவும் ஜயண்டிற்கு கூடுதலாக $4 மில்லியன் செலவாகும்
ஜயண்டில் தொடரும் விலைக்கழிவு
1 mins read
-

