ஹலோகிட்டி- சக்குரா மலர்க் காட்சி ஏப்ரல் 11 வரை நீட்டிப்பு

ஹலோகிட்டி- சக்குரா மலர்க் காட்சி ஏப்ரல் 11 வரை நீட்டிப்பு

1 mins read
81119d43-3434-4d29-9838-ece3c55c36c9
கரை­யோ­ரத் தோட்­டங்­க­ளில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய ஹலோ கிட்டி- சக்குரா மலர்க் காட்­சி­ ஏப்ரல் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கரை­யோ­ரத் தோட்­டங்­க­ளுக்­குச் செல்­வோர் மேலும் மூன்று வார காலத்­துக்கு, ஏப்­ரல் 11ஆம் தேதி வரை ஹலோ கிட்டி- சக்குரா மலர்க் காட்­சி­யைக் கண்டு ரசிக்­க­லாம்.

ஆண்­டு­தோ­றும் இடம்­பெ­றும் இந்த மலர்க்­காட்சி முன்­னர் மொத்­தம் மூன்று வார காலத்­துக்கே இடம்­பெற்­றது.

ஆனால் மார்ச் 1 அன்று தொடங்­கிய இந்த ஆண்டின் காட்­சிக்கு ஐரோப்­பா­வி­லி­ருந்து செர்ரி பூ மரங்­கள் வரு­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டது. கப்­பல் துறை­யில் ஏற்­பட்ட இடை­யூ­று­கள் இதற்­குக் கார­ணம் என்று கரை­யோ­ரத் தோட்­டங்­கள் நேற்று கூறியது.

திட்­ட­மிட்­ட­படி ஜப்­பானிலிருந்து சிறப்பு சக்குரா மரங்­கள் வந்­தி­ருந்­தன. இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் ஐரோப்­பா­வி­லி­ருந்து வந்த மரங்­கள் பின்­னர் காட்­சி­யில் சேர்க்­கப்­பட்­ட­தாக கரை­யோ­ரத் தோட்­டங்­கள் கூறி­யது.

பார்­வை­யா­ளர்­கள் தோட்­டத்­தின் இணை­யப் பக்­கம் மூல­மா­கவோ அல்­லது விவேக தொலை­பேசி செயலி மூல­மா­கவோ நேரம் குறிப்­பிட்ட நுழை­வுச் சீட்­டு­களை வாங்க வேண்­டும். சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் வழங்­கிய $100 மின்­னி­யல் சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான சுற்­றுலா பற்­றுச்­சீட்­டைப் பயன்­படுத்­த­லாம்.

ஹலோ கிட்டி - சக்குரா மலர்க் காட்சி அன்­றா­டம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்­தி­ருக்­கும். மேல் விவ­ரங்­க­ளுக்கு கரை­யோரத் தோட்­டங்­க­ளின் ஃபேஸ்புக், டெலி­கி­ராம் பக்­கங்­களில் காண­லாம்.