'சூயஸ் கால்வாய் இடையூறால் வட்டார விநியோகம் பாதிக்கலாம்'

'சூயஸ் கால்வாய் இடையூறால் வட்டார விநியோகம் பாதிக்கலாம்'

2 mins read
4fcd5202-e423-472e-9052-7f99212ef01c
-

உல­கின் மிகப்­பெ­ரிய கொள்­க­லன் கப்­பல்­களில் ஒன்று சூயஸ் கால்­வா­யில் சிக்­கி­ய­தால், உல­கின் முக்­கி­ய­மான நீர்­வ­ழிப்­பா­தை­யில் ஏற்­பட்­டுள்ள போக்­கு­வ­ரத்துத் தடை­யால், சிங்­கப்­பூ­ருக்­கும் இந்த வட்­டா­ரத்­திற்­கு­மான விநி­யோ­கங்­கள் தற்­காலி­க­மா­கப் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் நேற்­று கூறியுள்­ளார்.

விநி­யோ­கத்­தில் இடை­யூறு ஏற்­பட்­டால், கையி­ருப்­பி­லுள்ள சரக்கு­களில் சில­வற்றை எடுக்கவேண்டி வரும் என்று திரு ஓங் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்டார்.

ஐரோப்பா, மத்­திய கிழக்­கில் இருந்து வரும் கப்­பல்­கள் ஆப்­பி­ரிக்க கண்­டத்­தின் தெற்கு முனை­யில் அமைந்­துள்ள நம்­பிக்கை முனை­யைச் (கேப் ஆஃப் குட் ஹோப்) சுற்றி ஆசி­யா­வுக்கு வரு­வது இதற்கு மாற்று வழி. ஆனால் இது ஒரு நீண்ட பய­ணம். இவ்­வழி­யில் பய­ணம் செய்ய மேலும் ஒன்று முதல் இரண்டு வாரங்­கள் ஆகும் என்­றார் அவர்.

இடை­யூறு நீடித்­தால், கப்­பல் பாதை­கள் மாற்­றி­வி­டப்­ப­டும்­போது சிங்­கப்­பூர் துறை­முக ஆணை­யம், இடை­யூ­று­க­ளைப் பட்­டி­ய­லி­டும். செயல்­பா­டு­கள் சீராக இருப்­பதை உறுதி செய்ய இது முன்­னரே திட்­ட­மிட வேண்­டும் என்று திரு ஓங் கூறி­னார்.

கால்­வா­யில் சிக்கியுள்ள 400 மீட்­டர் நீள­முள்ள, 224,000 டன் எடை கொண்ட 'எவர் கிவென்' சரக்­குக் கப்­பலை மீண்­டும் நகர வைக்­கும் முயற்­சி­யில் இழு­வைப் பட­கு­களும் தோண்­டி­களும் தோல்­வி­யுற்­றன. அதிக காற்று, தூசிப் புய­லுக்கு மத்­தி­யில் கப்­பல் பய­ணிக்­கும் திறனை இழந்­து­விட்­ட­தாக சூயஸ் கால்­வாய் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. கால்­வாயை மீண்­டும் திறக்க பல நாட்­கள் ஆகக்­கூ­டும் என்­றும் அது கூறி­யது.

உல­க­ளா­விய கடல்­வழி வர்த்­த­கத்­தில் சுமார் 10% இடம்­பெ­றும் சூயஸ் கால்­வா­யு­டன் அந்த வர்த்­த­கத்­தின் மூன்­றில் ஒரு பகு­தியை பூர்த்தி செய்­யும் மலாக்கா, சிங்­கப்­பூர் நீரிணைக­ளு­டன் ஒப்­பிட்ட திரு ஓங், இரண்டு நீர்­வ­ழி­களும் நெருக்­க­மாக இணைக்­கப்­பட்டு ஐரோப்பா, மத்­திய கிழக்கு, ஆசி­யாவை இணைக்­கின்­றன என்­றார்.

சூயஸ் கால்­வா­யில் ஏற்­பட்­டுள்ள இடை­யூறு, மத்­திய விரை­வுச் சாலைக்கு நடுவே பெரிய மரம் விழு­வ­தைப் போன்­றது. மத்­திய விரை­வுச்சாலை­யு­டன் தொடர்­பு­டைய ஒவ்­வொரு விரை­வுச்சாலை­யும் பாதிக்­கப்­படும் என்று அமைச்­சர் ஓங் விளக்­கி­னார்.

"தற்­போது உல­கம் எவ்­வாறு நெருக்­க­மாக ஒன்­றி­ணைந்­துள்­ளது என்­பதை விளக்­கும் மற்­றொரு துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­ப­வம் இது," என்று அவர் கூறி­னார்.