கொள்ளைநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்களுக்கு உதவ இரண்டு புதிய நிதித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு 142,500 வெள்ளி வரையில் திரட்டப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மதுபானக் கூடங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாடகை நிதியுதவிக்கு 75,000 வெள்ளி திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதி பெற்ற மதுபானக் கூடங்களுக்கு ஒரு மாத வாடகைச் செலவு வழங்கப்படும்.
சந்தைமய ஆதரவு நிதிக்கு மேலும் 67,500 ெவள்ளி திரட்டப்பட்டுள்ளது. மதுபானக் கூடங்களின் சந்தைமய முயற்சிக்கு உறுப்பினர்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி வழங்கப்படும்.
நேற்று வெளியிடப்பட்ட சங்கத்தின் அறிக்கையில் இந்த விவரங் கள் இருந்தன.
இரண்டு நிதியுதவிக்கும் இப்போது விண்ணப்பிக்கலாம் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள் அளித்த ஆதரவு மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது. 'Steer' எனும் எஸ்ஜி ஒன்றிணைந்த இயக்கத்தின் தொழில்நிறுவன மீள்திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் திரட்டப்பட்ட தொகையில் 50 விழுக்காட்டை ஈடு செய்துள்ளது.
கொள்ளைநோய் பாதிப்பிலிருந்து வர்த்தகங்கள் மீண்டு வருவதற்கும் பொருளியல் மீட்சிக்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும் நிதியுதவி கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடகை ஒப்பந்தத்தில் குறிப் பிடப்பட்டுள்ள ஒரு மாத வாடகை, 20,000க்கும் மேற்படாமல் வாடகை நிதியுதவி வழங்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பன்னிரண்டு மாதங்களுக்கு மேல் செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு நிதியுதவி வழங்கு வதில் முன்னுரிமை வழங்கப்படும். அப்படி 12 மாதங்களுக்கு மேல் செயல்படும் மதுபானக் கூடங்கள், முந்தைய ஆண்டைவிட தற்போது இரண்டாம் கட்டத் தளர்வில் வரு மானத்தில் 35 விழுக்காடு இழப்பு ஏற்பட்டதை நிரூபிக்க வேண்டும்.
சந்தைமய ஆதரவுக்கான நிதிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை விண்ணப் பங்களை சமர்ப்பிக்கலாம் என சங்கம் தெரிவித்தது.