நாஃபா ஊழியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

நாஃபா ஊழியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

1 mins read
47212982-329d-494d-97ad-96076b25ab26
-

நன்யாங் நுண்கலைக் கழகத்தின் முன்னாள் ஊழியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பாலியல் தொந்தரவுகளைச் செய்ததாக மாணவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் போலிசாரின் விசாரணைக்கு கழகம் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் மாணவர் ஒருவர் அந்தச் சம்பவம் குறித்து தெரிவித்து உள்ளதாகவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் வளாகத்தில் அந்தச் சம்பவம் நடை பெற்றதாகவும் கழகம் தெரிவித்திருந்தது.

மேல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. சுற்றறிக்கையில் நாஃபா தலைவர் டான்-சோ வாய் லான் கையெழுத்து இருந்தது.

பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஆதரவும் ஆலோசனையும் வழங்கப்படு வதாகவும் அறிக்கையில் கழகம் குறிப்பிட்டது.