'கத்தியைக் காட்டி மிரட்டியது உண்மைதான்'

'கத்தியைக் காட்டி மிரட்டியது உண்மைதான்'

2 mins read
6cdac4e9-e6b2-440d-9198-932b7ab5f288
-

எஸ்­பி­எஸ் பேருந்து ஓட்­டு­நரை கத்­தி­யைக் காட்டி மிரட்­டி­யது உண்­மை­தான் என்று நீதி­மன்ற வழக்­கில் ஆட­வர் ஒரு­வர் ஒப்­பு­தல் வாக்­கு ­மூ­லம் அளித்­துள்­ளார்.

முகக்­க­வ­சத்தை முறை­யாக அணி­ய ஓட்­டு­நர் வலி­யு­றுத்­தியதால் ஆத்­தி­ர­ம­டைந்த கான் வீ இயோவ் கத்­தியைக் காட்டி ஓட்டுநரை மிரட்டியுள்ளார்.

திரு கான் மீது ஆபத்­தான ஆயு­தங்­களை அனு­ம­தி­யின்றி வைத்­தி­ருத்­தல், வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­தல் உட்­பட ஆறு குற்­றச் ­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. ஆறு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

இதை­ய­டுத்து பின்­னர் ஒரு தேதி­யில் கானுக்­குத் தண்­டனை விதிக்­கப்­படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்­போது அவர் மீதான இதர ஏழு குற்­றச்சாட்­டு­க­ளை­யும் நீதி­பதி கவ­னத்­தில் கொள்­வார் என எதிர்பார்க் கப்படுகிறது.

எஸ்­பி­எஸ் பேருந்து ஒட்­டு­நரை மட்­டு­மல்­லா­மல் கடந்த ஆண்டு ஒரு மாத காலத்­தில் பலரை கான் மிரட்­டி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்ற ஜூலை 27ல் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்­டில் கோெஜக் ஓட்டு ­ந­ரு­டன் அவர் பிரச்­சி­னை­யில் ஈடு­பட்­டார்.

முழு டாக்சி கட்­ட­ணத்­தை­யும் அவ­ரால் செலுத்த முடி­ய­வில்லை. அப்­போது சுத்­தியைக் காட்டி அவர் மிரட்­டி­யுள்­ளார். காரின் நடுப்­ப­குதி­யை­ அவர் சேதப்­ப­டுத்­தி­னார்.

மூன்று நாட்­க­ளுக்குப் பிறகு உட்­லண்ட்­சின் தற்­கா­லிக பேருந்து நிலை­யத்­தில் இறங்­கிய அவர், அங்­கி­ருந்த பாது­காப்பு அதி­கா­ரியை சுத்­தி­ய­லைக் காட்டி மிரட்­டி­யுள்­ளார்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி எஸ்­பி­எஸ் பேருந்து ஓட்­டு­நர் தொடர் ­பி­லான சம்­ப­வம் நடை­பெற்­றது.

முகக்­க­வ­சத்தை கீழே இழுத்­து­விட்டு கை­பே­சி­யில் கான் பேசிக் கொண்­டி­ருந்­தார்.

இத­னைக் கவ­னித்த ஓட்­டு­நர் முகக்­க­வசத்தை சரி­யாக அணி­யும்­படி கூறி­னார்.

இத­னால் ஆத்திரமடைந்த அவர், ஓட்­டு­நரை தகாத வார்த்­தை­க­ளால் சாடி­னார்.

பின்­னர் கத்­தி­யைக் காட்டி ஓட்டு ­நரை அவர் மிரட்­டி­னார். இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து ஈசூன் எம்­ஆர்டி நிலை­யத்­தில் கானை அடை­யா­ளம் கண்­டு­பி­டித்து போலி­சார் கைது செய்­த­னர். அவ­ரி­ட­ மி­ருந்து இரண்டு கத்­தி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.