எச்எஸ்ஏ எச்சரிக்கை: அந்த நான்கு மருந்துகளும் வேண்டாம்

எச்எஸ்ஏ எச்சரிக்கை: அந்த நான்கு மருந்துகளும் வேண்டாம்

1 mins read
e6ca4357-21b9-4e00-bc1f-9fe5e5501357
நான்கு மருந்து களிலும் மோச மான பக்க விளைவு களை ஏற்படுத்தும் 'சிபுடிராமைன்' கலந்து உள்ளது. -

உடல் எடை­யைக் குறைக்க உத­வு­வ­தா­கக் கூறி இணை­யத்­த­ளத்­தி­லும் சமூக ஊட­கங்­க­ளி­லும் விற்­கப்­படும் நான்கு மருந்­து­களில் தடை செய்­யப்­பட்ட 'சிபு­டி­ரா­மைன்' கலந்­துள்­ளது. 'சிபு­டி­ரா­மைன்' பக்­க­வா­தம் அல்­லது மார­டைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது.

நான்­கில் 'ஃபிளாஷ் ஸ்லிம்' எனும் மருந்தை எடுத்­துக்கொண்ட ஒரு­வ­ருக்கு வாந்தி, தூக்­க­மின்மை, இத­யப் பட­ப­டப்பு போன்ற பக்­க­ வி­ளை­வு­கள் ஏற்­பட்­ட­தாக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­தது. அந்த மருந்து, எளி­தல் அகற்ற முடி­யாத கொழுப்பைக் கரைத்து ஓரிரு நாட்­களில் வித்தியாசம் தெரியும் எனறு உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

இதனை பொது­மக்­கள் வாங்­கவோ சாப்­பி­டவோ கூடாது என்று எச்­எஸ்ஏ வலி­யு­றுத்­தி­யது.

இந்­தப் பொருளை விற்­ப­னை­யி­லி­ருந்து அகற்ற மின்­வர்த்­த­கத் தளம் மற்­றும் சமூக ஊட­கங்­க­ளு­டன் தொடர்பு கொண்­டுள்­ள­தா­க­வும் அது கூறி­யது.

'லீடீ பொட்­டா­னிக்­கல் பெவ­ரேஜ் மிக்ஸ் பைனாப்­பிள் ஜூஸ் பவு­டர் வித் ஆஃப்ரிக்­கன் மேங்கோ', 'குவின் எஸ் ஆமை­யேரா', 'ஷோகோ­லைட் டபுள் சாக்­லேட் குக்­கீஸ் வித் ஹுடியா கோர்­டோனி எக்ஸ்ட்­ராட் அண்ட் எல் கார்­னை­டைன்' ஆகி­யவை சிபு­டி­ரா­மைன் கலந்­துள்ள இதர மூன்று மருந்­து­ க­ளா­கும்.

"இந்த உடல் எடை­யைக் குறைக்­கும் மருந்­து­கள் விரை­வில் கொழுப்பைக் கரைத்­து­வி­டு­வ­தா­க­வும் ஏழு முதல் 14 நாட்­க­ளுக்­குள் வித்­தி­யா­சத்தைக் காண­லாம் என்று விளம்பரப்­ப­டுத்­தப்­ப­டு­வதாக எச்­எஸ்ஏ குறிப்­பிட்­டது.

'சிபு­டி­ரா­மைன்' மாயத்தோற்றம் போன்ற இதர பக்­க­வி­ளை­வு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தக்கூடும்.