சொகுசு கொண்டோமினியம் $300 மில்லியனுக்கு விற்பனை

சொகுசு கொண்டோமினியம் $300 மில்லியனுக்கு விற்பனை

2 mins read
fe521d74-0bb9-4447-ac6f-528b86d5179a
-

சிங்­கப்­பூ­ரில் புதி­தா­கக் கட்­டப்­பட்ட சொகுசு தனி­யார் அடுக்­கு­மாடி வீடு­கள் மொத்­தம் $300 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டுள்­ளன. எண் 2 டிரேகாட் பார்க்­கில் உள்ள அந்த கொண்­டோ­மி­னி­யத்­தில் மொத்­தம் 20 வீடு­கள் உள்­ளன.

ஸ்வை­யர் புரோப்­பர்ட்டிஸ் ஆஃப் ஹாங்­காங் நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான 'ஈடன்' சொகுசு கொண்­டோ­மி­னி­யத்­தின் 20 வீடு­களும் கிட்­டத்­தட்ட $300 மில்­லி­ய­னுக்கு பரி­வர்த்­தனை செய்­ய­ப்பட்­டன என்று தி பிசி­னஸ் டைம்ஸ் நாளி­தழ் தெரி­வித்­தது.

அந்த பரி­வர்த்­த­னை­யின் விவ­ரங்­கள் தெரி­ய­வில்லை. அந்த வீடு­கள் அனைத்­தை­யும் வாங்­கி­ய­வர் ஒரு­வரா அல்­லது பலரா என்பதும் தெரி­ய­வில்லை ஆனால் அந்த பரி­வர்த்­தனை செய்­த­வர் (அல்­லது செய்­த­வர்­கள்) வடக்கு ஆசி­யா­வைச் சேர்ந்­த­வர்­கள் என அறி­யப்­ப­டு­கிறது.

சவில்ஸ் நிறு­வ­னத்­து­டன் இணைந்த இயாப் அமைப்­பின் சான்ட்ரா இயாப் இந்த தனி­யார் பரி­வர்த்­த­னையை நடத்­தி­யுள்­ளார் என்­றும் தெரி­ய­வ­ரு­கிறது. தி பிசி­னஸ் டைம்ஸ் நாளிதழ் விசா­ரித்­த­தற்கு ஹட்­டன்ஸ் நிறு­வ­னம் கருத்­து­ரைக்க மறுத்­து­விட்­டது.

மேற்­கண்ட பரி­வர்த்­த­னை­யின் மூலம் சரா­ச­ரி­யாக ஒரு சதுர அடி கிட்­டத்­தட்ட $4,900க்கு விலை போய் உள்­ளது.

அந்த சொகுசு குடி­யி­ருப்­பில் உள்ள 20 வீடு­கள் ஒவ்­வொன்­றும் 4 அறை வீடு­கள். ஒரு மாடியில் ஒரு வீடு என்று மூன்­றாம் மாடியில் இருந்து 22ஆம் மாடி வரை அந்த 20 வீடு­களும் இடம்ெபற்றுள்ளன.

ஒவ்­வொரு வீடும் கிட்­டத்­தட்ட 3,035 சதுர அடி பரப்­ப­ள­வில் அமைந்­துள்­ளது.

இந்த 22 மாடி கட்­ட­டத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் கடந்த 2019ஆம் ஆண்டு முடி­வ­டைந்­தன. அதில் ஒரு நீச்­சல் குளம், சிறு­வர் நீச்­சல் குளம், பூங்கா, மொட்டை மாடி பூங்கா போன்ற வசதி­கள் உள்­ளன.