418,000 வெள்ளி ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையளாப்படுத்தப்பட்டவர்களில் ஒருவரான ஓர் ஆடவருக்கு நீதிமன்றத்தில் இன்று ஆறு ஆண்டுகள் பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோஷுவா ஜான் ஃபூ குவோ லீ மீது சுமத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்றும் பிறரைத் தாக்கியதாக வேறு இரண்டு குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.
பிறரை பயமுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர் அதையும் ஒப்புக்கொண்டார். அந்த 25 வயது சிங்கப்பூரர், மேலும் ஏழு போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
ஈராண்டுகளுக்கு முன்னர் ஃபூ, 28 வயது எர்னஸ்ட் லியோங் ஸாங் ஷெங்குடன் கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, கள்ள பணமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ராய்ஸ்டன் லிம் சுவீ ஷெங் கீழ் இவர் வேலை செய்தார்.
வேறு இரண்டு நபர்களுடன் லியோங் தென்கொரியா சென்று 418, 000 வெள்ளியை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சுனில் நாயர் தெரிவித்தார்.
இங்கிடம் தென்கொரியாவில் பணம் கொடுக்கப்பட்டது. வந்த மூன்று ஆட்களுக்கு இடையே அந்தப் பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
லியோங் அந்தப் பணத்தைத் தமக்கே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார். தம்முடன் சேரும்படி அவர் ஃபூவிடம் கேட்டபோது ஃபூ சம்மதித்தார்.
இந்த வழக்கு குறித்து லிம், இங் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட்டுள்ளனர். லியோங் இன்னும் பிடிபடவில்லை.

