காயமடைந்த ஊழியர்; மேற்பார்வையாளருக்கு சிறை

காயமடைந்த ஊழியர்; மேற்பார்வையாளருக்கு சிறை

1 mins read
b1c599d7-f15e-411c-92e6-21c78a688cda
-

2018ஆம் ஆண்டில் நடந்த விபத்தினால் இடுப்பிலிருந்து கீழ்வரை அசைவுகள் இழந்த ஓர் ஆடவரின் மேற்பார்வையாளருக்கு ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

'லுவா சான் இலெக்ட்ரிகல் அண்ட் கன்ஸ்டிரக்ஷன் கான்ட்ரெக்டர்ஸ்' நிறுவனத்தில் அப்போது பணிபுரிந்திருந்த 66 வயது லுவா ஹுவா கியோங், கவனக்குறைவின் காரணமாக அவரது ஊழியர் ஒருவரின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட திரு இயே கோ கோ, இந்த விபத்தின் காரணமாக தனது இடுப்புக்குக் கீழ் இருக்கும் எந்த உடற்பாகத்தையும் அசைக்க முடியவில்லை.

அங் மோ கியோவிலுள்ள ஒரு திடலில் கூடாரத்தை அந்த ஊழியர் அமைக்கும்போது அந்த விபத்து ஏற்பட்டது. அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் குழுவிற்கு லுவா மேற்பார்வையாளராக இருந்தார். பாதிக்கப்பட்டவர், திரு இயே கோ கோ.