கடல்துறை பருவநிலை மாற்ற ஆராய்ச்சிப் பணிக்கு $25 மி.

கடல்துறை பருவநிலை மாற்ற ஆராய்ச்சிப் பணிக்கு $25 மி.

2 mins read
c65abd22-be4c-41d2-9918-e31d04993ca1
-

சுற்றுச்சூழல் மீள்திறன் உள்ளிட்ட மூன்று அம்சங்களில் புதிய ஆராய்ச்சித் திட்டம் கவனம் செலுத்தும்

எம்­சி­சி­எஸ் கடல்­துறை பரு­வ­நிலை மாற்ற அறி­வி­யல் துறைக்கு $25 மில்­லி­யன் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. கடல்­நீர் மட்­டம் உயர், கடல் மேற்­ப­ரப்பு வெப்­ப­நிலை அதி­க­ரிப்பு, தீவிர சூறா­வளி நிகழ்­வு­கள் போன்ற பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க இந்த நிதி அத்­து­றைக்­குப் பயன்­படும்.

அத்­து­டன், அர­சாங்­கம் வழங்­கும் இந்த நிதி தேசிய பூங்­காக் கழ­கம் முன்­னின்று நடத்­தும் எம்­சி­சி­எஸ் ஆராய்ச்­சித் திட்­டத்­திற்­கும் கைகொ­டுக்­கும். பல்­வேறு அர­சாங்க அமைப்­பு­கள், ஆராய்ச்­சிக் கழ­கங்­கள், தொழிற்­து­றைப் பங்­காளி நிறு­வ­னங்­கள் போன்­ற­வை­யும் இந்த ஆராய்ச்­சி­யில் ஈடு­படும்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று நடை­பெற்ற கருத்­த­ரங்கு ஒன்­றில் இந்­தத் திட்­டம் குறித்த அறி­விப்பை வெளி­யிட்­டார். 'நகர நீடித்த நிலைத்­தன்மை ஆராய்ச்சி மற்­றும் வளர்ச்சி இணை­யக் கருத்­த­ரங்கு 2021' என்­னும் நிகழ்வு அது. இணை­யம் வழி­யாக முதன்­மு­றை­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருக்­கும் இந்­தத் தொடர் கருத்­த­ரங்கு ஓராண்­டுக்கு நடை­பெ­றும். பல­த­ரப்­பட்ட பணி­களை உள்­ள­டக்­கிய இந்த ஆராய்ச்­சித் திட்­டம் மூன்று அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தும். சுற்­றுச்­சூ­ழல் மீள்­தி­றன், சுற்­றுச்­சூ­ழல் பொறி­யி­யல் மற்­றும் கடல்­து­றை­யில் பாது­காக்­கப்­படும் கரி­மம் (புளூ கார்­பன்) போன்­றவை அவை.

முதல் அம்­சத்­தில், கடல்­துறை உயி­ரி­னங்­கள், அவற்­றின் வாழ்­வி­டங்­கள் போன்­ற­வற்­றின் மீது பரு­வ­நிலை மாற்­றம் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தாக்­கம், பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ரான கடல்துறை சுற்­றுச்­சூ­ழல் மீள்­தி­றனை ேமம்

­ப­டுத்­தக்­கூ­டிய நட­வ­டிக்­கை­கள் போன்­ற­வற்­றில் ஆராய்ச்­சிப் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும்.

அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றை­க­ளின் மூலம் கடல்­துறை மூல­த­னங்­க­ளைக் காக்க இப்­பணி உதவி புரி­யும்.

அடுத்­த­தாக சுற்­றுச்­சூ­ழல் பொறி­யி­யல் மீதான ஆராய்ச்சி, நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களை அடை­யா­ளம் காண உத­வும். கடல் நீர் மட்­டம் உயர்­வும், ஆக்­ரோ­ஷ­மான சூறா­வளி போன்­ற­வற்­றுக்கு எதி­ரா­கக் கட­லோர வட்­டா­ரத்­தைப் பாது­காக்க இத்­த­கைய பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் உத­வும்.

இறு­தி­யான ஆராய்ச்சி அம்­சம் 'புளூ கார்­பன்' மீதா­னது. கரிம வர்த்­த­கம் மூலம் சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லுக்கு உத­வக்­கூ­டிய கடல்­துறை கரி­மத்தை உரு­வாக்­கு­வ­தன் மீது ஆராய்ச்­சிப் பணி கவ­னம் செலுத்­தும். 'புளூ கார்­பன்' வர்த்­த­கம் இரு நோக்­கங்­கள் ஒரே நேரத்­தில் நிறை­வேற்­றக்­கூ­டி­யது. கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­தோடு இயற்­கைச் சுற்­றுச்­சூ­ழலை இது பாது­காக்­கும் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.