உற்பத்தித் துறை 16.4% வளர்ச்சி

உற்பத்தித் துறை 16.4% வளர்ச்சி

2 mins read
d5dc935d-9eb8-4f99-a440-1f253102d188
உற்பத்தித் தொழிற்கூடம். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

சிங்­கப்­பூ­ரின் உற்­பத்தி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் கடந்த மாதம் 16.4 விழுக்­காடு வளர்ச்சி கண்­ட­தாக பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது. அந்தத் துைற தொடர்ந்து 4வது மாதமாக கண்டிருக்கும் வளர்ச்சி இது.

இந்த வளர்ச்­சிக்கு பகுதி மின்­

க­டத்­தி­கள் மற்­றும் அவை தொடர்­பான சாத­னங்­கள், மருந்­து­கள், மருத்­து­வச் சாத­னங்­கள் போன்­ற­வற்­றுக்­கான தேவை அதி­க­ரித்­ததும் கார­ணம் என்­றும் அது தெரி­வித்து உள்­ளது. ஜன­வரி மாதம் 9.2 விழுக்­காடு என்று மேல்­நோக்­கித் திருத்­தப்­பட்­டது முதல் உற்­பத்­தித் துறை வளர்ச்சி வேக­மெ­டுத்து வரு­கிறது.

உயிர்­ம­ருத்­து­வம் தவிர்த்து மற்ற துறை­க­ளின் உற்­பத்தி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 13.6% விரி­வ­டைந்­தது. குறிப்­பாக மின்­னி­ய­ல் துறை 30.3% வளர்ச்சி கண்­டது.

மின்­க­டத்­தி­க­ளைக் கையா­ளும் துறை சாதனை அள­வாக 36.5% வளர்ந்­தது. அந்த வளர்ச்­சிக்கு ஐந்­தாம் தலை­முறை (5ஜி) தொலைத்­தொ­டர்­புச் சந்­தை­யின் தேவை கைகொ­டுத்­தது.

தக­வல்­தொ­டர்­புத் துறை 36.5 விழுக்­காடு என­வும் பய­னீட்­டாளர் மின்­னி­யல் துறை 5.7 விழுக்­காடு என­வும் வளர்ச்சி கண்­டன.

பகு­தி­மின்­க­டத்தி தொடர்­பான சாத­னங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து இயந்­திர உற்­பத்­தி­யும் அது தொடர்­பான பாகங்­க­ளின் உற்­பத்­தி­யும் 23.5 விழுக்­காடு வளர்ந்து துல்­லிய பொரு­ளி­யல் துறை 15 விழுக்­காடு வளர உத­வின.

இதற்­கி­டையே, மருந்­து­க­ளின் உற்­பத்தி 16.7 விழுக்­காடு வளர்ச்சி கண்­ட­தைத் தொடர்ந்து உயர்­ம­ருத்­து­வத் துறை உற்­பத்தி 23.9 விழுக்­காடு வளர்ந்­தது.

அதே­போல மருத்­துவ சாத­னங்­க­ளுக்­கான ஏற்­று­மதி தேவை அதி­க­ரிப்பு கார­ண­மாக மருத்­து­வத் தொழில்­நுட்­பத் துறை 12.6 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது. ரசா­யனத் துறைக்­குட்­பட்ட இரு பிரி­வு­க­ளின் உற்­பத்தி அதி­க­ரித்­த­தன் கார­ண­மாக அந்­தத் துறை 2.5% என்­னும் சிறிய வளர்ச்­சி­யைக் கண்­டது.

எரி­பொ­ருள் ரசா­ய­னத் துறை 6.1% வளர்ச்சி கண்­ட­போ­தி­லும் இதர ரசா­ய­னம் மற்­றும் பெட்­ரோ­லி­யப் பிரி­வு­கள் முறையே 3.3 விழுக்­காடு, 25.3 விழுக்காடு சரி­வைச் சந்­தித்­தன.

பொது­வான உற்­பத்­தி­யி­லும் 5.5 விழுக்­காடு வீழ்ச்சி காணப்­பட்­டது. சீனப் புத்­தாண்டு விடு­முறை தினங்­களும் இதற்கு ஒரு கார­ணம்.

அதே­போல போக்­கு­வ­ரத்து பொரு­ளி­யல் துறை­யின் உற்­பத்­தி­யும் 24.2% ஆயி­னும், மோட்­டார் வாக­னங்­க­ளுக்­கான இயந்­திர பாகங்­கள் மற்­றும் உதிரிபாகங்­க­ளுக்­கான தேவை கூடி­ய­தைத் தொடர்ந்து அத்­து­றை­யின் நிலப் பகுதி உற்­பத்தி 20.3 விழுக்­காடு வளர்ந்­த­தாக கழ­கம் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்டுள்­ளது.