மனைவி வீட்டில் இல்லாதபோது தமது மகளை பல ஆண்டு காலமாக பாலியல் இச்சைக்கு ஆளாக்கி உள்ளார் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆடவர் ஒருவர். மூன்று வயதாக இருந்தபோது அக்குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தைத் தொடங்கிய அவர், பிள்ளை 9 வயதாக வளர்ந்த பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். ஆபாச காணொளிகளை அவர் தமது மகளிடம் காட்டி வந்து உள்ளார். ஒரு குழந்தையும் அவரது தந்தையும் பாலியல் செய்கையில் ஈடுபடுவதைப் போன்ற ஒரு காணொளியும் அவற்றுள் ஒன்று. மகளோடு விளையாட வந்த 9 வயது சிறுமி ஒருவரையும் தமது வலை யில் வீழ்த்தினார் தற்போது 44 வயதாகும் அந்த ஆடவர். தமது மகளை பாலியல் பலாத் காரம் செய்தது தொடர்பிலான 3 குற்றச்சாட்டுகளை அவர் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். மீண்டும் ஏப்ரல் 19ஆம் தேதி அவரிடம் விசா ரணை நடத்தப்படும். சிறுமியின் விவரங்களைக் காக்கும் பொருட்டு ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. விவாக ரத்து பெற்றதால் இவர் தற்போது தமது மனைவியுடன் இல்லை.
3 வயதில் சில்மிஷம், 9 வயதில் சீரழிப்பு: தந்தை மகளுக்குச் செய்த கொடுமை
1 mins read
-