இந்தோனீசிய அதிபரை பிரதமர் லீ நேரில் சந்திப்பார்

இந்தோனீசிய அதிபரை பிரதமர் லீ நேரில் சந்திப்பார்

1 mins read
aec88dd6-63ec-46af-86a6-cfcd4d0969a2
-

பிர­த­மர் லீ சியன் லூங்­கும்

இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வும் இவ்­வாண்­டில் நேர­டி­யா­கச் சந்­தித்­துப் பேச உள்­ள­னர். தலை­வர்­கள் ஓய்­வுத்­தள சந்­திப்­பாக அது அமை­யும். பெரும்­பா­லும் பிந்­தான் விடு­முறை தீவில் இவ்­விரு தலை­வர்­க­ளின் சந்­திப்பு நிக­ழும் சாத்­தியம் உள்­ளது.

சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­

கி­ருஷ்­ண­னும் இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரெட்னோ மர்­சு­டி­யும் ஜகார்த்­தா­வில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது இத்­த­க­வ­லைத் தெரி­வித்­த­னர்.

கொவிட்-19 கொள்­ளை

­நோ­யின் பிடி­யி­லி­ருந்து விடு­

ப­டு­வ­தற்­கான வழி­களை கண்­ட­றி­வது தொடர்­பா­க­வும் இரு நாட்­டுத் தலை­வர்­க­ளின் வரு­டாந்­திர சந்­திப்­புக்­கான ஆயத்­தப் பணி­கள் குறித்­தும் தாங்­கள் ஆலோ­சித்­த­தாக இரு வரும் அப்­போது கூறினர்.

இந்த வரு­டாந்­திர சந்­திப்பு சிங்­கப்­பூர்-இந்­தோ­னீ­சிய இரு­

த­ரப்பு உற­வு­க­ளின் உத்­தி­பூர்வ அவ­சி­யத்தை உணர்த்­து­வ­தோடு முக்­கிய அம்­சங்­களில் ஒத்­து­ழைப்பை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்­கான வழி­களை ஆரா­ யும் தள­மா­க­வும் அமை­யும் என்று திரு­வாட்டி ரெட்னோ கூறி­னார்.