தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$604 மி. செலவில் அமையும் ஹவ்காங் சந்திப்பு நிலையம்

2 mins read
2dee854d-b345-4871-bc76-5e5387b45d41
ஓவியரின் கைவண்ணத்தில் ஹவ்காங் சந்திப்பு நிலையம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம் -

குறுக்கு ரயில் பாதை­யில் ஹவ்­காங் சந்­திப்பு நிலை­ய­மும் அதற்­கான சுரங்­கப் பாதை­களும் $604 மில்­லி­யன் செல­வில் அமைக்கப்படவுள்ளன.

அதற்­கான ஒப்­பந்­தத்தை தென்­கொ­ரி­யா­வின் 'சாம்­சுங் சி & டி கார்ப்­ப­ரே­ஷன்' நிறு­வ­னத்­திற்கு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று வழங்­கி­யது. அதற்­கான பணி­கள் இவ்­வாண்­டின் இறு­திக் காலாண்­டில் தொடங்­கப்­பட வேண்­டும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

வரும் 2030ஆம் ஆண்­டிலிருந்து குறுக்கு ரயில் பாதை செயல்­பாட்­டிற்கு வர­வுள்ளது. அதன் முதல் கட்­டத்­தில் ஹவ்­காங் சந்­திப்பு நிலை­யம் அமை­ய­வி­ருக்­கிறது. விமானப் பூங்­கா­வில் இருந்து பிரைட் ஹில் வரை குறுக்கு ரயில் பாதை­யின் முதல் கட்­டம் அமை­யும். அதற்­கான ஒப்­பந்­தப்­புள்­ளி­கள் அனைத்­தும் கோரப்­பட்டு, ஒப்­பந்­தங்­கள் படிப்­படி­யாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஹவ்­காங் சந்­திப்பு நிலை­யத்­தின் வடி­வ­மைப்பு, கட்­டு­மா­னம், இப்­போது வடக்கு-கிழக்கு ரயில் பாதை­யில் அமைந்­துள்ள ஹவ்­காங் நிலை­யத்­தில் செய்­யப்­பட வேண்­டிய மாற்­றங்­கள் ஆகிய பணி­களை சாம்­சுங் சி&டி நிறு­வ­னம் மேற்­கொள்­ளும். ஹவ்­காங் நிலை­யத்­தை­யும் அந்த நி­று­வ­னமே கட்­டி­யது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­போது தாம்­சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதை­யில் கால்­டி­காட், மரின் பரேட் நிலை­யங்­க­ளை­யும் டௌன்­ட­வுன் தடத்­தில் ஸிலின் நிலை­யத்­தை­யும் சாம்­சுங் சி&டி நிறு­வ­னம் அமைத்து வரு­கிறது. வடக்கு-கிழக்கு ரயில் பாதை­யில் கோவன், டௌன்­ட­வுன் பாதை­யில் எக்ஸ்போ, அப்­பர் சாங்கி ஆகிய நிலை­யங்­க­ளை­யும் அந்­நி­று­வ­னமே அமைத்­தது.

குறுக்கு ரயில் பாதை, சிங்­கப்­பூர் எட்­டா­வது 'எம்­ஆர்டி' ரயில் பாதை. ஜூரோங் லேக் வட்­டா­ரம், பொங்­கோல் மின்­னி­லக்க வட்­டா­ரம், சாங்கி ஆகிய முக்­கிய பகு­தி­களை அந்த ரயில் பாதை இணைக்­கும். அப்­பா­தை­யில் அமை­யும் நிலை­யங்­களில் கிட்­டத்­தட்ட பாதி நிலை­யங்­கள், மற்ற ரயில் பாதை­க­ளு­டன் சந்­திப்பு நிலை­யங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும்.