இளையரிடம் மதியுரைக் கலாசாரத்தை வளர்க்க புதிய கூட்டணி

இளையரிடம் மதியுரைக் கலாசாரத்தை வளர்க்க புதிய கூட்டணி

2 mins read
f2eb63db-41eb-47ce-aad3-3f5cda538291
Credits: Care Singapore -

உயர்­நி­லைப் பள்­ளி­யில் பயின்­ற­போது தோழ­மைப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்ட குமாரி எல்ஃபி சுஃபியாந்தி, அப்­பி­ரச்­சி­னை­க­ளைக் கடந்து செல்ல 'கேர் சிங்­கப்­பூர்' அமைப்­பைச் சேர்ந்த ஒரு­வர் உத­வி­னார்.

இப்­போது 26 வய­தா­கும் சுஃபியாந்தி, இளை­யர்­களை நெறிப்­ப­டுத்தி, வழி­காட்­டு­வ­தற்­காக இளை­யரை மையப்­ப­டுத்­திய அற­நி­று­வ­னம் ஒன்­றில் பணி­யாற்­று­கிறார்.

இன்­னொ­ரு­வ­ரின் மதி­யுரை தமக்கு எந்­த­ள­விற்கு உத­வி­யது என்­பதை அறிந்­துள்­ள­தால், இளை­யர்­க­ளுக்கு உத­வும் மதி­யு­ரைத் திட்­டத்­தில் இன்­னும் பலர் பங்­கு கொள்வர் என்று குமாரி சுஃபியாந்தி நம்­பு­கி­றார்.

இளை­யர் துறை­யில் மதி­யு­ரைத்­த­லுக்­கான தரத்தை மேம்­ப­டுத்­த­வும் இளை­யர்­கள் தங்­க­ளது முழு ஆற்­றலை வெளிப்­ப­டுத்தி சாதிக்­க­வும் உத­வும் வகை­யில், மதி­யு­ரைத்­த­லில் பொது­வான வளங்­களை உரு­வாக்­க­வும் சிறந்த நடை­மு­றை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வும் ஏது­வாக 'மதி­யு­ரைச் செயற்­கூட்­ட­ணியை' கலா­சார, சமூக, இளை­யர் துறை துணை அமைச்­சர் ஆல்­வின் டான் நேற்று அறி­வித்­தார்.

கடந்த ஜூனில் அர­சாங்­கத்­திற்­கும் தொழில்­துறை நிறு­வ­னங்­களுக்­கும் இடையே பங்­கா­ளித்­து­வங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­பின் அறி­விக்­கப்­பட்­டுள்ள 20வது செயற்­கூட்­டணி இது.

இந்­தப் புதிய மதி­யு­ரைச் செயற்­கூட்­டணி, மற்ற அமைப்­பு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றி, தொண்­டூ­ழிய மதி­யு­ரை­ஞர் வளத்­தை­யும் அவர்­க­ளுக்­கான பயிற்­சித் திட்­டங்­க­ளை­யும் உரு­வாக்­கும்.

இலாப நோக்­க­மற்ற 'சிங்­கப்­பூர் மதி­யு­ரைக் கூட்­டணி' அமைப்­பும் தேசிய இளை­யர் மன்­ற­மும் தலை­மை­யேற்­கும் இம்­மு­யற்­சி­யில், 'கேர் சிங்­கப்­பூர்' போன்ற மற்ற நெறிப்­ப­டுத்­தும் அமைப்­பு­களும் பங்­கேற்­கும்.

முன்­வந்து, இளை­யர்­க­ளுக்கு வழி­காட்ட ஊக்­கு­விக்­கும் வகை­யில், இளை­யர்­களை நெறிப்­ப­டுத்த உறு­தி­மொழி ஏற்­க­வும் கடப்­பாடு கொள்­ள­வும் ஏது­வாக afasingapore.org எனும் இணை­யத்­த­ளம் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் முறை­சார் மதி­யுரைத் திட்­டங்­களில் பங்­கேற்பு குறை­வா­கவே இருந்து வரு­கிறது.

இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில், 16 முதல் 34 வய­துக்­குட்­பட்ட 1,500 பேரி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­தாய்­வில், தங்­க­ளுக்கு உத­வக்­கூடிய அத்­திட்­டங்­களில் 11 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே பங்­கேற்­றது தெரி­ய­வந்­தது.

அப்­படி முறை­சார் மதி­யு­ரைத் திட்­டங்­களில் பங்­கேற்­கா­தோ­ரில் 63 விழுக்­காட்­டி­னர், அதைச் செய்­யத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­த­னர்.

ஆயி­னும், முறை­சார் மதி­யு­ரைத் திட்­டங்­கள் தொடர்­பில் குறிப்­பி­டத்­தக்க அளவு விழிப்­பு­ணர்வு இல்லை என்­ப­தை­யும் அத்­திட்­டங்­களில் தங்­க­ளுக்­குப் பொருத்­த­மா­னது எது என்­பது பற்றி குறை­வா­கவே தெரிந்து வைத்­தி­ருந்­த­தை­யும் அந்த ஆய்வு காட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக் கொண்ட 'மில்யு இன்­சைட்' எனும் பய­னீட்­டா­ளர் ஆய்வு நிறு­வ­னம், தேசிய இளை­யர் மன்­றத்­திற்­காக அந்­தக் கருத்­தாய்வை மேற்­கொண்­டது.

அத்­த­கைய மதி­யு­ரைத் திட்­டங்­களில் தங்­க­ளது செயல்­தி­றனை வளர்த்­துக்­கொள்ள இங்­குள்ள பல முக­வை­களும் ஆர்­வ­மாக உள்­ளன.

நேற்று இடம்­பெற்ற தேசிய மதி­யுரை உச்­ச­நிலை மாநாட்­டில் நிபு­ணர்­கள், மதி­யு­ரைத்­தல் தொழில்­பு­ரி­வோர், கல்­வி­மான்­கள், மதி­யுரைத்­த­லில் ஆர்­வ­முள்­ள­வர்­கள் எனப் பல­ரும் அதில் தங்­க­ளுக்­குள்ள அறி­வை­யும் சிறந்த நடை­மு­றை­க­ளை­யும் பகிர்ந்­து­கொண்­ட­னர். டோபி காட்­டில் உள்ள ஒய்­எம்­சி­ஏ­வில் நடந்த இந்­நி­கழ்ச்­சி­யில் நேர­டி­யா­க­வும் இணை­யம் வழி­யா­க­வும் 500க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்­ற­னர்.