மேலும் 23 பேருக்கு கொரோனா, சமூக அளவில் ஒருவர் பாதிப்பு

மேலும் 23 பேருக்கு கொரோனா, சமூக அளவில் ஒருவர் பாதிப்பு

1 mins read

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,288ஆக உயர்ந்தது. சமூக அளவில் ஒருவர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளில் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை. எஞ்சிய 22 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் அனைவருக்கும் இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அல்லது தனிமைப்படுத்தப்பட்டனர். சமூக அளவில் ஒருவர் பாதிக்கப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் 26 வயது மியன்மார் நாட்டவர். அவர் சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக வேலை செய்பவர். இம்மாதம் 12ஆம் தேதிக்குப் பிறகு இவர்தான் சமூக அளவில் பாதிப்படைந்துள்ள முதல் நபர்.

குறிப்புச் சொற்கள்