பொருளியல் கதவு மேலும் அகலமாக திறக்க வகை செய்வோம்

பொருளியல் கதவு மேலும் அகலமாக திறக்க வகை செய்வோம்

4 mins read
271aa96c-6ba4-4983-99b2-88bce4051f58
-

கொவிட்-19 இன்­ன­மும் உல­கத்­தை­விட்டு ஒழி­ய­வில்லை. இருந்­தா­லும் அந்­தக் கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் இப்­போ­தைக்கு நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக இருக்­கும் தடுப்­பூ­சியை உல­கம் கெட்­டி­யாகப் பிடித்­துக்­கொண்டு உலக மக்­கள் சமூ­கத்­தில் கிருமி பரவாமல் தடுக்க வலுவான எதிர்ப்பு அரணை உரு ­வாக்க அரும்­பா­டு­பட்டு வரு­கிறது.

இந்த இமா­லய முயற்­சி­யில் வெற்றி கிட்­டு­வ­தற்­கான அறி­கு­றி­கள் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கத் தெரி­யத் தொடங்கி இருக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் பொறுப்­புள்ள அர­சாங்­க­மும் புரிந்­து­ணர்­வு­மிக்க மக்­களும் ஒன்­றி­ணைந்து இடை­விடா­மல் பாடு­பட்­ட­தால் கொவிட்-19 கிருமி ஏறக்­கு­றைய கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கிறது.

வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோ­ருக்கு மட்டுமே தொற்று கண்­ட­றி­யப்­பட்டு வரு­கிறது. எல்லை கடந்து வரும் கிருமி இங்கே பர­வு­வதை தொடக்­கத்­திலேயே துடைத்­தொ­ழிக்க நூற்­றுக்­கு­நூறு செம்­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவற்­றின் விளை­வாக சிங்­கப்­பூ­ரில் கடந்த இரண்டு வார கால­மா­கவே கொவிட்-19 சமூ­கத்­தொற்று அவ்வளவாக இல்லை என்று சொல்­லும் அள­வுக்கு நிலைமை இருக்­கிறது. வெளி­நாட்டு ஊழி­யர் தங்குவிடு­தி­களி­லும் புதி­தாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் அவ்­வ­ள­வாக இல்லை.

இத்­த­கைய ஒரு சூழ­லில் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு விரை­வில் கைகூடி வர இருக்­கிறது. அடுத்த மாதம் முதல் அவை தளர்த்­தப்­ப­டக்­கூ­டும்.

வேலை இடங்­க­ளுக்குத் திரும்­பும் ஊழி­யர்­கள் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும். நிகழ்ச்­சி­க­ளி­லும் விழாக்­க­ளி­லும் அதி­கம் பேர் கலந்­து­கொள்ள அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள் என்று எல்­லாம் வெளி­யா­கும் செய்­தி­கள் நம்­பிக்கை தரு­ப­வை­யாக, வர­வேற்­கத்­தக்­க­வை­யாக இருக்­கின்­றன.

ஆனா­லும் கொவிட்-19க்கு முன்பு இருந்த சூழ்­நிலை முழுமையாக இப்­போ­தைக்குத் திரும்­பாது என்­பதை உறு­தி­படக் கூறி­வி­ட­லாம். சமூக ஒன்று கூடல் நிகழ்ச்­சி­களில் எட்டு பேர் வரை­தான் கலந்­து­கொள்­ள­லாம் என்ற கட்டுப்பாடு தொடரும்.

முத­லா­ளி­கள் கூடு­மானவரை அதிக ஊழி­யர்­களை வீட்­டில் இருந்தே வேலை பார்க்­கும்­படி செய்­வதே இன்­ன­மும் அவ­சி­ய­மா­ன­தா­கத் தெரி­கிறது.

வேலை­யி­டங்­களில் கிரு­மித்­தொற்று இடம்­பெறாமல் தடுத்­து­விட, கட்­டுப்­ப­டுத்­தி­விட இய­லும் என்­பதே இதற்­கான கார­ணம்.

முக்­கால்­வாசி ஊழி­யர்­கள் வேலை­யி­டத்­துக்குத் திரும்­பும் அள­விற்குக் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­ப­ட லாம் என்­றா­லும் அவர்­கள் வேலை பார்க்­கும் இடத்தின் சூழ்­நிலை கொவிட்-19க்கு முன் இருந்தது போல் இருக்­க இயலாது என்­பது நடைமுறை தேவை.

முகக்­க­வ­சம், சமூ­கப் பாது­காப்பு இடை­வெளி எல்­லாமே தொட­ர­வேண்­டிய நிலை­தான் இருக்­கிறது.

ஒரு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­வர்­கள் ஒரு குறிப்­பிட்ட அள­வுக்கு அதிக எண்­ணிக்­கை­யில் இருக்­கும் பட்­சத்­தில் நிகழ்ச்சி தொடங்­கு­வதற்கு முன்­பாக பரி­சோ­தனை நடத்த வேண்­டிய கட்­டா­ய­மும் இருக்­கும். புதி­தாக பிறப்­பிக்­கப்­பட்டு இருக்­கும் வழி­காட்டி நெறி­மு­றை­கள், முத­லா­ளி­களும் நில, கட்­டட உரி­மை­யா­ளர்­களும் நிர்­வா­கி­களும் முக்­கி­ய­மான பல காரி­யங்­க­ளைச் செய்­வதைக் கட்­டா­ய­மாக்­கும். இதற்கெல்லாம் அவர்கள் ஆயத்தமாக வேண்டும்.

இப்­போது இருப்­ப­தை­விட இன்­னும் அதி­க­மான ஊழி­யர்­கள் வேலை­யி­டத்­துக்குத் திரும்­பும் வாய்ப்பு இருப்­ப­தால் முத­லா­ளி­கள் பல கொள்­கை­களையும் மாற்­றிக்­கொள்ள வேண்டி இருக்­கும்.

இட வச­தி­களை விசா­லப்­ப­டுத்தி, வேலை இடங் களில் மருந்­த­டித்து, அப்­போ­தைக்கு அப்­போது அலுவலகம் சுத்­தப்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறுதிப்­ப­டுத்தி, சமூ­கப் பாது­காப்பு இடை­வெ­ளியை நடை­மு­றைப்­படுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை முத­லா­ளி­கள் செய்ய வேண்டி இருக்­கும். அதே­போல கட்­டட உரி­மை­யா­ளர்­கள் குளிர்­சாதன வச­தி­கள், பொது இடங்­கள், அதி­கம் புழங்கும் இடங்­கள் முத­லான இடங்­க­ளைச் சுத்­தப்­ப­டுத்தி கிரு­மித்­தொற்றைத் தடுக்க வேண்­டிய அவ­சி­ய­மும் இருக்­கும்.

கட்­ட­டங்­களில் நுழை­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­கள் பரி­சோ­த­னை­கள், வரு­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை கட்­டுப்­பாடு, தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான வச­தி­கள் எல்­லாமே நடப்­பில் இருக்க வேண்­டும். இவை அனைத்­தும் அதி­கா­ரி­க­ளின் பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­படும் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

வீடு­களில் இருந்து வேலை செய்­யும் முறை நிரந்­த­ர­மா­ன­தாக இராது என்­ப­தால் அப்­ப­டி­யும் இப்­படி­யு­மாக ஊழி­யர்­கள் வேலை பார்க்­கும் நிலை ஏற்­படும். முத­லா­ளி­கள் இதற்கு தங்­க­ளைச் சரி­செய்து கொள்ள வேண்­டும்.

இதற்­குத் தோதாக கொள்­கை­களை அவர்­கள் கவ­ன­மாக வடி­வ­மைக்க வேண்­டும். யார், எவர் வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்க வேண்­டும்; எந்­தெந்த பணி­களை நேர­டி­யா­கச் செய்ய வேண்­டும் முத­லான பல­வற்­றை­யும் முத­லா­ளி­கள் முடி­வெ­டுக்க வேண்டி இருக்­கும்.

வேலை­ இடங்களில் வேலை பார்க்கும் பாணியும் மாற்­றங்­களைக் காண­வேண்டி இருக்­கும்.

ஊழி­யர்­கள் நேர­டி­யா­கச் சென்று வேலை பார்க்க வேண்­டிய அவ­சி­யம் உள்ள உற்­பத்­தித் துறை போன்ற துறை­க­ளைப் பொறுத்தவரை மாற்று வேலை நேர ஏற்­பா­டு­கள் அதி­கம் இடம்­பெற வேண்டி இருக்­கும். அதிக தானி­யக்­க­ம­யம் பயன்­பட வேண்­டும்.

இவை எல்­லாம் ஒரு­பு­றம் இருக்க, கொவிட்-19 மறு­ப­டி­யும் தலை­தூக்­கி­னால் தன்­னு­டைய வழி­காட்டி நெறி­மு­றை­களை மாற்ற வேண்டி இருக்­கும் என்று சுகா­தார அமைச்சு எச்­ச­ரித்து உள்­ளது.

மொத்தத்தில் இப்போதைய நிலவரங்களைப் பார்க்கும்போது மிகக் கவ­ன­மாக காய்­களை நகர்த்தி பொரு­ளி­ய­லைத் திறந்­து­வி­டக்­கூ­டிய அணு­கு­முறை மிக முக்­கி­யமா­ன­தாக இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை. பல நாடுகளில் கொவிட்-19 கிருமி மீண்டும் தலை எடுப்பதைப் போன்ற ஒரு நிலையை இங்கு நாம் அனுமதித்துவிடக்கூடாது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசி செயல்­திட்­டம் சர­ள­மாக நடந்து வரு­கிறது. படிப்­படி­யாக அது விரி­வு­ப­டுத்­தப்­பட்டும் வரு­கிறது.

இந்­தச் சூழ்­நி­லை­யில் அனை­வரும் தங்­கள் பொறுப்­பு­களை உணர்ந்து பாது­காப்­பு­டன் நடந்­து­கொண்­டால் பொரு­ளி­யலைத் திறந்து­வி­டு­வ­தில் மேலும் மேலும் முன்னேறலாம்.