பருவநிலை மாநாடு: பிரதமருக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு

பருவநிலை மாநாடு: பிரதமருக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு

2 mins read
2a9c650a-2dd8-48e3-9808-a10024727cce
பிரதமர் லீ சியன் லூங் (இடது), அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்கா முன்னின்று நடத்தும் இரண்டு நாள் உச்சநிலை மாநாடு, உலகப் பருவநிலை மாற்ற சவாலைச் சமாளிப்பதில் முன்களப் பணி ஆற்றுவதற்கு அந்த நாடு திரும்பி வந்துள்ளதைக் குறிக்கும் வகையில் இடம்பெறுகிறது. படங்கள்: தொடர்பு, தகவல் அமைச்சு, ஏஎஃப்பி -

பரு­வ­நிலை மாற்­றம் குறித்து விவா­திக்க சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ உட்­பட நாற்­பது நாடு­க­ளின் தலை­வர்­களுக்கு அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அழைப்பு விடுத்­துள்­ளார்.

ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்டின், சீன அதி­பர் ஸி ஜின்­பிங் ஆகி­யோ­ருக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை மாளிகை பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

முன்­னாள் அதி­பர் டோனால்ட் டிரம்ப்­பின் நிர்­வா­கம், பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து அதி­ர­டி­யாக பின் வாங்­கி­யது.

புதிய அதி­ப­ராக பொறுப்பு ஏற்­ற­துமே ஜோ பைடன், இந்த விவ­கா­ரத்­தில் மீண்­டும் முன்­னிலை வகிக்க முடிவு செய்­துள்­ளார்.

பூமி நாளைக் குறிக்­கும் ஏப்­ரல் 22ஆம் தேதி இரண்டு நாள் உச்­ச­நிலை மாநாடு தொடங்­கு­கிறது.

"சீன அதி­பர் ஸி, ரஷ்ய அதி­பர் புட்­டின் ஆகி­யோ­ருக்கு தாங்­கள் அழைக்­கப்­பட்­டுள்­ளது தெரி­யும். ஆனால் மாநாடு குறித்து அவர்­களி­டம் அதி­பர் பைடன் இன்­ன­மும் நேர­டி­யாக பேச­வில்லை," என்று வெள்ளை மாளிகை பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

கொள்­ளை­நோய்ப் பர­வல் காரண­மாக மாநாடு முழு­வ­தும் மெய்­நி­கர் காணொளி வழி­யாக நடக்குமென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. டோனல்ட் டிரம்ப் வில­கிய பாரிஸ் பரு­வ­நிலை உடன்­பாட்­டில் மீண்­டும் அமெ­ரிக்கா சேர்ந்­து­கொள்ளும் என்று வெள்ளை மாளி­கை­யில் பதவி­யேற்ற முதல் நாளில் ஜோ பைடன் உறுதி வழங்­கி­யி­ருந்­தார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளைச் சமா­ளிக்­கும் முயற்­சி­க­ளுக்குத் தலைமை தாங்க மீண்­டும் அமெ­ரிக்கா முன்­வந்து இருப்­ப­தைக் குறிக்­கும் வகையில் அடுத்த மாதம் இரு நாள் உச்­ச­நிலை மாநாடு நடக்­கிறது.

ஸ்காட்­லாந்­தின் கிளாஸ்கோ நக­ரில் நவம்­பர் மாதம் பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான ஐநா பெரும் கூட்­டம் நடக்­கிறது. இதற்கு முன்­ன­தாக அதி­பர் பைடன் உல­கத் தலை­வர்­களைக் கூட்­டு­கி­றார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தைச் சமா­ளிப்­ப­தற்­கான உடன்­பாடு 2015ல் கையெ­ழுத்­தா­னது.

உல­கின் மாபெ­ரும் பொரு­ளி­யல் சக்­தி­யாக விளங்­கும் அமெ­ரிக்கா கடந்த பிப்­ர­வரி 19ல் தன்னை அந்த உடன்­பாட்­டில் மீண்­டும் இணைத்­துக்­கொண்­டது.

உல­கில் கரி­ய­மில வாயுவை அதி­க­மாக வெளி­யி­டும் நாடு­களில் அமெ­ரிக்கா இரண்­டா­வது இடத்­தில் இருக்­கிறது என்பது குறிப் பிடத்தக்கது.

அமெ­ரிக்க அதி­பர் அழைப்பு விடுத்­துள்ள உல­கத் தலை­வர்­களில், இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் ஜப்­பான், பிரே­சில், கனடா, இஸ்­ரேல், சவூதி அரே­பியா, பிரிட்­டன் ஆகிய நாடு­க­ளின் தலை­வர்­களும் குறிப்­பி­டத்­தக்­க­வர்­கள்.

ஏப்ரல் 22, 23ல் 40 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மெய்நிகர் சந்திப்பு