புதிதாக ஒருவருக்கு சமூகத்தொற்று; மொத்தம் 23 பேர் பாதிப்பு

புதிதாக ஒருவருக்கு சமூகத்தொற்று; மொத்தம் 23 பேர் பாதிப்பு

2 mins read
a18f780c-6aac-4bb4-9cd7-21be87f7f2e4
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­களில் ஒரு­வர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர். மற்ற 22 பேரும் வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள். அவர்­க­ளுக்கு தனிமை ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்கு விடு­தி­களில் புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

வெள்­ளிக்­கி­ழ­மை­யன்­றும் புதி­தாக ஒரு­வர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­னார். அவர் மியன்­மார் நாட்டைச் சேர்ந்த 26 வயது பணிப்­பெண் ஆவார்.

மார்ச் 12க்குப் பிறகு வெள்­ளிக்­கி­ழ­மை­தான் முதன்­மு­த­லாக ஒரு­வ­ருக்கு சமூ­கத்­தொற்று ஏற்­பட்­டது.

அந்­தப் பணிப்­பெண்­ணுக்கு மார்ச் 23ஆம் தேதி இரு­மல் ஏற்­பட்­டது. மூக்கு ஒழு­கி­யது. அன்று­தான் அவர் தன் முத­லா­ளி­யின் வீட்­டில் வேலை பார்க்­கத் தொடங்­கி­னார். அவர் அடுத்த நாள் பொது மருத்­து­வ­ரைச் சந்­தித்­தார். அவ­ருக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அந்­தப் பணிப்­பெண்­ணுக்­குத் தொற்று இருப்­ப­தாக மார்ச் 25ஆம் தேதி தெரி­ய­வந்­தது. அதை­ய­டுத்து மருத்­துவ வாக­னத்­தில் அவர் தேசிய தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

தேசிய பொது சுகா­தார சோத­னைக் கூடம் அவ­ருக்கு மார்ச் 25ல் நடத்­திய பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. ஆனா­லும் ரத்த சோதனை மூலம் தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது. பணிப்­பெண் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்றி வந்த போது நடத்­தப்­பட்ட சோத­னை­யில் அவ­ருக்­குத் தொற்று இல்லை.

பணிப்­பெண் ஜன­வரி 23ல் மியன்­மா­ரில் இருந்து இங்கு வந்­தார். பிப்­ர­வரி 6 வரை தனி இடத்­தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றிய பிறகு வெளி­நாட்டு பணிப்­பெண்­க­ளுக்­கான விடுதி ஒன்­றுக்கு அவர் மாற்­றப்­பட்­டார். பிப்­ர­வரி 6 முதல் மார்ச் 23 வரை அந்­தப் பெண் அந்த விடு­தி­யி­லேயே இருந்­தார்.

இத­னி­டையே, நேற்று புதி­தாக கிருமி தொற்­றி­ய­வ­ரை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 60,288 ஆகக் கூடி­யது. கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் 30 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர். தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்களின் எண்ணிக்கை 15 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.