சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 12 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,300ஆக அதிகரித்துள்ளது. சமூக அளவில் யாருக்கும் பாதிப்பில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. பாதிக்கப்பட்ட 12 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் அனைவருக்கும் இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அல்லது தனிமைப்படுத்தப்பட்டனர். சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் 48 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவார். இந்தியா செல்லவதற்கு முன் அப்பெண்மணி கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்தகொண்டதை அடுத்து கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று 10 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர். இதுவரை மொத்தம் 60,098 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். கிருமித்தொற்று காரணமாக 32 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குணமடைவோருக்காக அமைக்கப்பட்ட இடங்களில் 113 பேர் இருக்கின்றனர். சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக 30 பேர் மாண்டுவிட்டனர்.
மேலும் 12 பேருக்கு கொரோனா
1 mins read
குறிப்புச் சொற்கள்

