தோ பாயோ வெஸ்ட்டில் புதிய ரத்தச் சுத்திகரிப்பு நிலையம்

தோ பாயோ வெஸ்ட்டில் புதிய ரத்தச் சுத்திகரிப்பு நிலையம்

2 mins read
b8de516d-6abb-417b-8f28-60450e215aa2
-

தோ பாயோ வெஸ்ட் சமூக மன்­றத்­தில் புதிய ரத்­தச் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அதி­கா­ர­பூர்­வ­மாக நேற்று திறக்­கப்­பட்­டது. இதை­ அடுத்து, ரத்­தச் சுத்­தி­க­ரிப்பு செய்து­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் தோ பாயோ வெஸ்ட்­ வட்டார வாசிகள் இனி தங்­கள் வீட்­டிற்கு அரு­கிலேயே அதைச் செய்­து­கொள்ள லாம்.

மன்­றத்­தின் மூன்­றாம் தளத்­தில் அமைந்­துள்ள அந்த 'செக் ஹொங் சூன் - தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வன' ரத்­தச் சுத்­தி­க­ரிப்பு நிலையத்தை வெளி­யு­றவு, போக்கு­வரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் திறந்து வைத்­தார்.

சமூக மன்­றத்­தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தின் முதல் ரத்­தச் சுத்தி­க­ரிப்பு நிலையம் இது­தான். தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னம், தோ பாயோ வெஸ்ட் சமூக மன்­றம், கோங் மெங் சான் ஃபோர் கார்க் சீ மடா­ல­யம் ஆகி­ய­வற்­றின் கூட்­டு­மு­யற்­சி­யில் இந்நிலையம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டத்­திற்­காக கோங் மெங் சான் ஃபோர் கார்க் சீ மடா­ல­யம் 1.4 மில்­லி­யன் வெள்ளி நன்­கொடை அளித்­துள்­ளது.

தீவு முழு­வ­தும் தேசிய சிறு­நீரக அற­நி­று­வ­னத்­தின் 39 ரத்­தச் சுத்­தி­க­ரிப்பு நிலையங்­கள் அமைந்­துள்­ளன. அவை பெரும்­பா­லும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கப் பேட்­டை­க­ளின் பொது­வெ­ளி­களில் அமைந்­துள்­ளன.

தோ பாயோ வெஸ்ட்­டில் அமைக்­கப்­பட்­டுள்ள புதிய ரத்­தச் சுத்­தி­க­ரிப்பு நிலையத்­தில் 20 சுத்தி­கரிப்­புச் சாத­னங்­கள் இருப்­ப­தா­க­வும் அவற்­றின்­மூ­லம் 120 நோயா­ளி­கள் வரைக்­கும் சேவை வழங்க இய­லும் என்­றும் தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தின் தலை­வர் ஆர்தர் லாங் குறிப்பிட்டார்.

சிறு­நீ­ர­கச் சுகா­தா­ரம் தொடர்­பில் மக்­க­ளைச் சென்­ற­டை­யும், ஆத­ரவு வழங்­கும் நட­வ­டிக்­கை­களை அதி­கப்­ப­டு­த்­து­வ­தன் மூலம் சமூ­கத்தை ஈடு­ப­டுத்த தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக திரு லாங் கூறினார்.

சிறு­நீ­ரக நோய்­கள் தடுப்பு, நிர்­வா­கம் குறித்து பொது­மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்படுத்து­வதற்­காக தோ பாயோ வெஸ்ட் - தாம்­சன் அடித்­தள அமைப்­பு­களைப் பங்­கா­ளி­க­ளா­கச் சேர்த்­துக்­கொண்டு, தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னம் செயல்­பட்டு வரு­வதா­க­வும் அவர் சொன்­னார்.