சிங்கப்பூரில் புதிதாக 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 60,300ஐ எட்டிவிட்டது.
சமூக அளவில் புதிதாக எவரையும் கொரோனா தொற்றவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்றுப் பிற்பகல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
புதிதாகப் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்திறங்கியதும் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தனிமைப் ப்டுத்தப்பட்டனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் கிருமி பாதிப்பு கண்டதாக உறுதிப்படுத்தப் பட்டோரில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர் என்றும் அவர் 18 வயது நிரந்தரவாசி என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்பெண் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பயணத்திற்குமுன் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் மேலும் பத்துப் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட, மீண்டோர் எண்ணிக்கை 60,098ஆக உயர்ந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் உள்ள ஒருவர் உட்பட இன்னும் 32 பேர் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

