உருமாறிய கொவிட்-19 கிருமியால் ஏற்படும் அறிகுறிகளுடன் கூடிய தொற்றைத் தடுப்பதில் 'எம்ஆர்என்ஏ' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் தடுப்பூசிகள் ஆற்றல் மிக்கவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் போடப்பட்டு வரும் ஃபைசர் - பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகள் அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. முதலில் கண்டறியப்பட்ட கொவிட்-19 கிருமி, அதன்பின் கண்டுபிடிக்கப்பட்ட பிரிட்டனின் 'பி117', பிரேசிலின் 'பி1' ஆகிய உருமாறிய கிருமிகளை மட்டுப்படுத்தும் நோயெதிர்ப்புப் பொருள்களை 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகளை அதிகளவில் உருவாக்குவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில், தென்னாப்பிரிக்காவின் 'பி1351' உருமாறிய கிருமிக்கு எதிராகப் பயன்படுத்தும்போது, அந்தத் தடுப்பூசிகளின் நோயெதிர்ப்புப் பொருள் உருவாக்கத் திறன் குறைவாகவே இருக்கிறது.
'செயல்திறன்மிக்க ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகள்'
1 mins read
-

