வழிகாட்டும் இளையர்கள்

கல்வி, வேலை, திருமணம் தொடர்பில் எந்தப் பாதையில் செல்லலாம் என்ற கேள்வியை அடிக்கடி முணுமுணுக்கும் இளையரிடையே, பிறரது வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவரும் சிந்தனையுடன் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த இளையர்கள். இவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

விளையாட்டு மூலம் ஊக்குவிப்பவர்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 

காற்­பந்து விளை­யாட்­டா­ள­ராக 'ஹவ்­காங் யுனை­டெட்', 'யங் லயன்ஸ்' எனச் சுமார் ஐந்து ஆண்டு­க­ளாக சிங்­கப்­பூர் பிரி­மி­யர் லீக் குழுக்­களில் இடம்­பெற்­ற­வர் 29 வயது கா.சசி­த­ரன். காற்­பந்து வீர­ராக இருப்­பது நீண்ட காலத்­திற்கு நிலை­யான ஒரு வேலைப் பாதை­யாக அமை­யாது என்று நினைத்த அவர், 2014ஆம் ஆண்­டில் 'சிம்' பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அனைத்­து­லக வர்த்­த­கத் துறை­யில் பட்­ட­யக்­கல்­வியை மேற்­கொண்­டார்.

அதேவேளை­யில் பொழு­து­போக்­காக தேசிய காற்­பந்து லீக்­கில் இடம்­பெ­றும் சிங்­கப்­பூர் கிரிக்­கெட் கிளப் குழு­வி­லும் இணைந்து விளை­யா­டி­னார். 2018ஆம் ஆண்­டில் ஸடெர்­லிங் பல்­க­லைக்­க­ழ­கம் வழங்­கும் விளை­யாட்டு வர்த்­தக நிர்­வா­கத் துறை­யில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டு கடந்­தாண்டு பட்­ட­மும் பெற்­றார் சசி­த­ரன்.

வெவ்­வேறு காற்­பந்துப் பயி­ல­ரங்கு­கள் மூலம் சிறு­வர் முதல் இளை­யர் வரை­யி­லா­னோ­ருக்­குப் பயிற்­று­விப்­பா­ளர் பொறுப்பை அவர் பகு­தி­நே­ர­மாக மேற்­கொண்­டார். அப்­போது விளை­யாட்டுத் துறை சார்ந்த வேலை­க­ளைத் தேட­லாம் என்று எண்­ணி­னார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ணத்­தால், அத்­துறை சார்ந்த வேலை­கள் கிடைப்­பது சசி­த­ர­னுக்­குச் சவா­லாக இருந்தது.

'மை­கே­ரி­யர்ஸ்­ஃபியூச்­சர்' (MyCareersFuture) இணை­யத்­தளத்­தில் வேலை தேடிக்­கொண்­டி­ருந்­த­போது, 'பாய்ஸ் டவுன்' (சிறு­வர்­கள் இல்­லம்) வீர­தீர விளை­யாட்டு நிலை­யத்­தில் 'எஸ்­ஜி­யு­னை­டெட்' பயிற்சி வாய்ப்பு இருந்­தது அவர் கண்­ணில் பட்­டது.

சுவா­ர­சி­ய­மாக இருக்­கும் என்று கருதி, அந்த ஒன்­பது மாதப் பயிற்­சிக்கு விண்­ணப்­பித்து, கடந்த செப்­டம்­பர் முதல் அந்­நி­லை­யத்­தின் திட்ட அதி­காரி ஆனார்.

சுவர் ஏறு­தல், இயற்கை வளங்­களை ஆராய்­தல் என இல்லத்தின் இளம் வய­தி­ன­ருக்­கும் மற்றவர்களுக்­கும் தகுந்த நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்­வது சசி­த­ர­னுக்­குப் பிடித்­தி­ருந்­தது.

பாதிப்­புக்கு ஆளா­கக்­கூ­டிய இளை­யர்­க­ளின் கதை­யைக் கேட்டு, அவர்­க­ளுக்கு நம்­பிக்கை கொடுத்து, அவர்­க­ளால் ஒரு செய­லைச் செய்ய முடி­யும் என்று உற்­சா­கம் அளிக்­கும்­போது அதில் மிகுந்த திருப்தி அடை­வ­தாக பகிர்ந்­து­கொண்­டார் சசி­த­ரன்.

"விளை­யாட்­டில் இளை­யர்­கள் அதிக ஈடு­பாடு காட்ட ஊக்­கு­விக்க முடி­வ­தில் மகிழ்ச்சி அடை­கி­றேன். ஏனெ­னில், ஒழுக்­கம், தாக்­குப்­பிடிக்­கும் தன்மை போன்­ற­வற்­றைக் கற்­றுக்­கொண்டு ஒரு முழு­மை­யான கற்­றல் அனு­ப­வத்தை அவர்­க­ளால் பெற முடி­கிறது," என்று கூறி­னார் சசி­த­ரன்.

சுவர் ஏறு­தல் போன்ற விளை­யாட்­டுப் பயிற்­சி­களை நடத்த சசி­த­ரனை நிலை­யம் நிய­மித்­துள்ள நிலை­யில், புதிய திறன்­க­ளை­யும் அவர் கற்று வரு­கி­றார்.

சமூக சேவைத் துறை என்­றா­லும் விளை­யாட்டு தொடர்­பான பணி­யில் இடம்­பெ­று­வது தமது விருப்­பத்­திற்கு ஏற்ப இருப்­ப­தால், இவ்­வாண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு அந்­நி­லை­யத்­தில் முழு நேர ஊழி­ய­ராகும் வாய்ப்பு இருப்பதாக என்று சசி­த­ரன் குறிப்­பிட்­டார்.

"புதிய பட்­ட­தா­ரி­கள் திறந்த மனப்­பான்­மை­யு­டன் வேலைப் பயிற்சி­க­ளைக் கரு­தி­னால், வெவ்­வேறு துறை­களில் தங்­க­ளுக்கு விருப்­ப­மான வேலை­வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றி­ய­லாம்," என்று அறி­வு­றுத்­தி­னார் துடிப்­பு­மிக்க சசி­த­ரன்.

முதியோரின் மின்னிலக்கச் சவால்களைத் தீர்ப்பவர்

இர்­ஷாத் முஹம்­மது

 

திறன்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­தத் தெரி­யாத தாயா­ருக்கு அடிப்­படை பயன்­பாட்­டைக் கற்­றுக்­கொ­டுக்க முயற்சி செய்­தார் 25 வயது ரி‌ஷி­காந்­தன் விஜ­ய­கு­மார். மறு­நாளே கற்­றதை மறந்­து­விட்­டார் ரிஷி­யின் 63 வயது தாயார் செந்­தா­மரை. பொறு­மை­யி­ழந்து கற்­றுக்­கொ­டுப்­பதையே நிறுத்­தி­விட்­டார் ரிஷி.

கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­புக்கு வந்­த­தும் ரிஷி­யின் தாயார், தம் பிள்ளை­களை­யும் பேரப்­பிள்­ளை­களை­யும் பார்க்­கா­மல் ஏக்­கத்­தில் இருந்­தார். நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் வீ கிம் வீ தொடர்பு, தக­வல் பள்­ளி­யில் தொடர்­புக் கல்வி இளங்­க­லைப் பாட இறுதி­ ஆண்­டில் பயி­லும் ரி‌ஷி, அப்­போது வேலைப் பயிற்­சியை மேற்­கொண்­டி­ருந்­தார்.

இர­வில் ரி‌ஷி வீடு திரும்­பும் வரை தாயார் காத்­தி­ருந்து, அவர் வந்­த­வு­டன் 'வாட்ஸ்­அப்' வீடியோ அழைப்பை இணைக்­கக் கோரு­வார். ரி‌ஷிக்கு அம்­மா­வின் வேதனை புரிந்­தது. பொறு­மை­யுடன் எளிய முறை­யில் மீண்­டும் அம்­மா­வுக்­குக் கற்­பித்­தார் அவர்.

அதே கால­கட்­டத்­தில் ரிஷி தம் இறு­தி­ ஆண்டு திட்­டப் பணியை மேற்­கொள்­ளும் நேரமும் வந்­தது. ஏதே­னும் ஒரு தொடர்பு பிர­சா­ரத்தை உரு­வாக்க வேண்­டும் என்­பதே திட்­டப் பணி­யின் எதிர்­பார்ப்பு எனக் கூறப்பட்டது.

ரிஷி தமது மூன்று குழு உறுப்­பி­னர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்­த­போது, தம் ‌அம்மா எதிர்­நோக்­கிய சவா­லை­யும் அதைத் தீர்த்து வைத்­த­தை­யும் குறித்து குழு­வி­ன­ரு­டன் பகிர்ந்­து­கொண்­டார். குழு உறுப்­பி­னர்­கள், ரி‌ஷி­யின் அனு­பவத்­தின் அடிப்­ப­டை­யில் தங்­களின் தொடர்பு பிர­சா­ரத்தை உரு­வாக்­க­லாம் என்று முடி­வெ­டுத்­த­னர்.

 

நான்கு மொழி­களில் எளிமை

 

இதை­ய­டுத்து, #CanOneLah! இயக்­கத்­தைத் தொடங்கி ஏறத்­தாழ 100 மூத்­தோ­ருக்கு உதவி புரிந்துள்­ள­னர் அக்குழு­வி­னர். குறைந்த வரு­மா­னம், படிப்­ப­றிவு அதி­கம் இல்­லாத முதி­யோ­ருக்­குப் படங்­கள் வழி எளிய முறை­யில் திறன்­பேசி மற்­றும் இதர மின்­னி­லக்க முறை­களைப் பற்றி கற்­பிக்­கும் முயற்­சி­யில் குழு­வி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

மிகு­தி­யான படங்­க­ளு­டன் ஆங்­கி­லம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­க­ளி­லும் கையே­டு­கள் தயா­ரித்­த­னர்.

முதி­யோர் நட­வ­டிக்கை மையங்­களில் பயிலரங்குகள், இரு முதி­யோர் நட­வ­டிக்கை மையங்­களில் சாலைக் காட்­சி­கள் என ஏற்­பாடு செய்­தி­ருந்த குழு­வுக்கு என்­டி­யு­வின் நலன் சேவை மன்­றத்­தின் கிட்­டத்­தட்ட 30 தொண்­டூ­ழி­யர்­கள் கைகொடுத்து வரு­கின்­ற­னர்.

 

சமூக ஆத­ரவு வழங்­கு­தல்

 

சமூக அள­வில் ஆத­ரவு வழங்கு­வதே இவர்­கள் திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.

குறிப்­பாக நோய்ப் பர­வல் சூழ­லில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் நேர­டி­யாகப் பார்த்­துக்­கொள்ள இய­லாத நிலை­யில் 'வாட்ஸ்­அப்' காணொளி அழைப்பு, 'ஸூம்' வழியே தொடர்பு­கொள்ள முதி­யோ­ருக்­குக் கற்­றுக்­கொ­டுத்­தால் குடும்­பத்­தி­ன­ரோடு அவர்­கள் இணைய உத­வும் என்­பதை அவர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். மின்­னி­லக்­கக் கல்­வியை முதி­யோர் ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யில், பொறு­மை­யாக அவர்­க­ளுக்­குக் கற்­பிக்க வேண்­டும் என்று அவர்­கள் முடி­வெ­டுத்­த­னர்.

"என் அம்­மாவை மன­தில் கொண்டே இத்­திட்­டத்­தைப் பரிந்­துரை செய்­தேன். இந்தத் திட்­டத்­தின்­மூ­லம் சமூ­கத்­தில் உள்­ள­வர்­களுக்கு அம்­மா­வுக்கு நேர்ந்த நிலை வரக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றேன்," என்­றார்.

"தொடக்­கக் காலத்­தில் குறைந்த வரு­மா­னம் கார­ணத்­தால் எங்­கள் குடும்­ப­மும் சிர­மப்­பட்­டது. என் சக நண்­பர்­க­ளுக்­குக் கிடைத்த வாய்ப்பு­களும் வச­தி­களும் எனக்­குத் தாம­த­மா­கவே அமைந்­தன," என்­றார் ரி‌ஷி. கை­பேசியை வைத்­தி­ருப்­பது ஆடம்­ப­ரச் செலவு என்­றும் வீண் செலவு என்­றும் கேட்டு வளர்ந்­த­வர் ரி‌ஷி.

"ஆனால் இப்­போது திறன்­பேசி­கள் அத்­தி­யா­வ­சியப் பொரு­ளாக மாறி­விட்­டன. அத­னால் முன்பு நான் இருந்த நிலை­யில் இப்­போது இருப்­ப­வர்­கள் பாதிப்­புக்கு உள்­ளா­கக்­கூடாது என்­பதே என் விருப்­பம்," என்­றார் அவர். இளங்­க­லைப் பட்­டப் படிப்­பின் இறு­தி­யாண்டுத் திட்­ட­மான "CanOneLah!", சமூ­கத்­திற்­கும் பலன் அளிக்­கும் வகை­யில் இருப்­ப­தால் அத்­திட்­டம் விரிவு­படுத்­தப்­பட வேண்­டும் என்ற திட்டத்தில் குழு­வி­னர் உள்­ள­னர்.

"என்­டியு நலன் சேவை மன்­றத்­தி­டம் ஒப்­ப­டைப்­பது அல்­லது முதி­யோர் நட­வ­டிக்கை மையத்­தி­டம் ஒப்­ப­டைப்­பது போன்ற வழி­களை ஆராய்­கி­றோம்.

"இத்­திட்­டத்­திற்­குத் தொடர்ந்து ஆலோ­ச­கர்­க­ளாக இருப்­ப­தில் நாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளோம்," என்­றார் ரி‌ஷி.

 

ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கு வழி சொல்பவர்

கி. ஜனார்த்­த­னன்

 

ஆரோக்­கிய குறிப்­பு­க­ளைச் சமூ­கத்­தி­ன­ரி­டம் சேர்க்­கும் பணியை மும்­மு­ர­மாக மேற்­கொண்டு வரு­கி­றார் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் சுகா­தார வழி­காட்டியான 29 வயது எஸ்.விக்­னேஷ்.

நியூ­கா­சல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உணவு, மனி­தச்­சத்­துத் துறை­யில் விக்­னேஷ் 2016ல் பட்­டம் பெற்­றார். உயர்­நி­லைப் பள்ளி பகு­தி­நேரக் கல்­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய பிறகு, கடந்த மூன்று ஆண்­டு­களாக சுகா­தார வழி­காட்­டி­யா­கப் பணி­யாற்­று­கி­றார்.

சிறு வயது முதல் சமை­ய­லி­லும் சத்­து­ண­வி­லும் ஆர்­வம் கொண்ட இவர், உண­வால் மனித உடல் எப்­படி பய­ன­டை­கிறது எனத் தெரிந்து­கொள்­வ­தில் ஈடு­பாடு கொண்­ட­வர்.

வெவ்­வேறு வயதுப் பிரி­வின­ருக்கு எந்த உண­வு­வ­கை­கள் எந்த அள­வில் பொருந்­தும், சத்­துள்ள உண­வுப்­பொ­ரு­ளைக் கடை­கள் அடை­யா­ளம் காண்­பது போன்ற திறன்­களைக் கற்­றுத்­த­ரு­கி­றார்.

"உதா­ர­ணத்­திற்கு, சமைத்த மாமிச, காய்­க­றி­களை விற்­கும் உண­வுக்­க­டை­களில் என்­னென்ன மூலப்­பொ­ருட்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன, தாளிப்­புப் பொருட்­கள் யாவை என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள முயற்சி செய்­வேன். அவற்றை மேலும் எவ்­வாறு ஆரோக்­கி­ய­மாக்­கலாம் என்­பது என் முதல் சிந்­தனை­யாக இருக்­கும்," என்­றார்.

குவோங் வாய் ஷு பரா­ம­ரிப்பு நிலை­யத்­தின் பெண்­ட­மி­யர் கிளை­யில் மூத்த வட்­டா­ர­வா­சி­க­ளு­டன் நேர­டி­யாக உரை­யாடி ஆலோ­சனை வழங்­கு­கிறார்.

உடல்­ந­லம், சுகா­தா­ரத் தேவை­கள், வாழ்க்­கை­முறை, வசதி என முதி­யோர் தொடர்­பான அம்­சங்­களைக் கருத்­தில் கொண்டு ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஏற்ற வழி­மு­றை­களைப் பரிந்­துரை செய்து வரு கிறார்.

"இவர்­கள் என்னை ஒவ்­வொரு முறை­யும் சந்­திக்­கும்­போது சுகா­தார இலக்கு ஒன்றை அவர்­க­ளி­டத்­தில் முன்­வைப்­பேன். அந்த இலக்கை அவர்­கள் அடைந்த பின்­னர்­தான் அடுத்த இலக்­குக்­குப் போக முடி­யும்," என்று விக்­னேஷ் தெரி­வித்­தார்.

கடந்­தாண்டு கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வல் தொடங்­கி­ய­போது அதற்கு ஏற்ற வித­மாக சுகா­தா­ரத் திட்­டங்­களை வகுக்க வேண்­டி­யி­ருந்­த­தா­கக் கூறி­னார். வீட்­டில் இருந்­த­ப­டியே நேர­லைக் காணொளி வழி உடற்­ப­யிற்சி வகுப்பு நடத்­தி­ய­தா­கக் கூறி­னார்.

உணவு தொடர்­பான சுகா­தா­ரக் குறிப்­பு­கள் எல்லா இனத்­த­வ­ருக்­கும் பொருந்­தாது எனக் குறிப்­பிட்ட விக்­னேஷ், பொது­வாக இந்­தி­யர்­கள் பழுப்பு அரி­சியை (brown rice) குழம்­பு­டன் சாப்­பி­டு­வ­தில்லை எனக் கூறி­னார். வெள்ளை அரி­சி­யோடு பழுப்பு அரி­சி­யைக் கலந்து சாப்­பிடு­வது சிறப்பு என்­றார்.

ஆரோக்­கி­ய­மான சமு­தா­ய­மாக மாறு­வ­தில் இளை­யர்­க­ளுக்கு முக்­கி­யப் பங்கு இருப்­ப­தா­கக் கூறிய விக்­னேஷ், இளை­யர்­கள் ஆரோக்­கி­ய­மான உண­வுப் பழக்­கங்­களை மேற்­கொண்டு தங்­கள் பெற்­றோர், தாத்தா பாட்­டி­மார்­க­ளை­யும் அவ்­வாறு செய்ய ஊக்­கு­விக்­க­ வேண்­டும் என்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!