மேலும் 21 பேருக்கு கொரோனா

மேலும் 21 பேருக்கு கொரோனா

1 mins read

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 21 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,321ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 21 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அல்லது தனிமைப்படுத்தப்பட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. 12 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து திரும்பிய சிங்கப்பூரர் அவர்களில் ஒருவர். பாதிக்கப்பட்ட 12 பேரில் பத்து பேருக்குக் கிருமித்தொற்றுக்கான அறிகுறி ஏதும் இல்லை. இருவருக்குக் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தன.

குறிப்புச் சொற்கள்