சுயநினைவு இழந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்குச் சிறை, பிரம்படி

சுயநினைவு இழந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்குச் சிறை, பிரம்படி

1 mins read

நண்பர்களின் தூண்டுதலின் பேரில் விடுமுறை விடுதி ஒன்றில் மதுபோதை காரணமாக சுயநினைவு இழந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு இன்று 12 ஆண்டுகள், மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் பலாத்காரம், மானத்துக்குக் களங்கம் விளைவித்த குற்றச்சாட்டுகளை 41 வயது யாப் சுன் சியே ஒப்புக்கொண்டார். 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியன்று டி'ரிசோர்ட்@டௌன்டவுன் ஈஸ்ட்டில் உள்ள விடுமுறை விடுதிக்குப் பெண் ஒருவரை அழைத்துச் சென்ற ஆடவர்களில் யாப்பும் ஒருவர். அந்தப் பெண்ணுக்கு அப்போது 24 வயது. மதுபோதையில் சுயநினைவு இழந்த அப்பெண்ணை யாப் பாலியல் பலாத்காரம் செய்தார். 29 வயது டே பூன் ஹுவாட் அப்பெண்ணைப் பாலியல் ரீதியாக தாக்கினார். இவற்றை 35 வயது கான் சூன் சாய் தமது கைபேசியில் காணொளி எடுத்தார். டேவுக்கு ஏற்கெனவே 10 ஆண்டுகள், மூன்று மாத சிறைத் தண்டனையுடன் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. கானுக்கு 15 மாதச் சிறையும் $20,800 அபராதமும் விதிக்கப்பட்டன.