கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஆறு உணவு, பான நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு இன்று தெரிவித்தது.
ஓரியென்டல் பிளாசாவில் உள்ள கிளப் மாவ் பை பார்கோட் உணவகத்தை மூட இரண்டாவது முறையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உணவகம் இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
மற்ற மேசைகளில் இருந்தோருடன் நெருக்கமாக இருந்ததற்கும் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்காததற்கும் மூன்று வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விதிமீறல் காரணமாக ஓரியென்டல் பிளாசாவில் உள்ள கிளப் பப்பேரியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அது இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து நேற்று வரை மூடப்பட்டிருந்தது.
மேலும் நான்கு உணவகங்களை இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 10.30 மணிக்குப் பிறகு மதுபானம் அருந்த வாடிக்கையாளர்களுக்கு அவை அனுமதி வழங்கியதால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

